search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாதுகாப்பில்லாத சுற்றுலா தளமாக மாறிவரும் ஒகேனக்கல்
    X

    ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் உள்ள சிறுவர் பூங்காவில் ஆங்காங்கே அமர்ந்து மது அருந்துபவர்களையும், பூங்கா வெறிச்சோடி கிடப்பதையும் காணலாம்.

    பாதுகாப்பில்லாத சுற்றுலா தளமாக மாறிவரும் ஒகேனக்கல்

    • ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
    • சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி கலை இழந்துள்ளது.

    தருமபுரி,

    தமிழகத்தின் தலை சிறந்த சுற்றுலா தளங்களில் ஒன்றாக திகழும் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகா புதுச்சேரியில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

    விடுமுறை நாட்களிலும், மற்ற தினங்களிலும் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக தமிழக சுற்றுலா துறையும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து பொழுதுபோக்கு அம்சங்களை உருவாக்கி உள்ளது.

    முதலைப் பண்ணை, மீன் அருங்காட்சியகம், சிறுவர் பூங்கா உள்ளிட்டவைகள் சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சி அளித்து வருகிறது. சிறப்பு வாய்ந்த சுற்றுலா தளம் என்பதால் இங்கு மதுபான கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தடையை மீறி ஒகேனக்கல் அருகே உள்ள பென்னாகரம் ஜக்கம்பட்டி அரசு மதுபான கடையில் இருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகா மாநிலத்திலிருந்தும் மது பாட்டில் கொண்டுவரப்பட்டு ஒகேனக்கல்லில் இரட்டிப்பு விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    சுற்றுலா தலத்தில் அனைத்து பகுதிகளிலும் குறிப்பாக ஒகேனக்கல் காவல் நிலையம் அருகிலும் மது பிரியர்கள் அமர்ந்து ஜாலியாக மது அருந்தி வருகின்றனர். ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் உள்ள சிறுவர்கள் பூங்காவில் இளைஞர்கள் மது அருந்தி மதுபான கூடமாக மாற்றியுள்ளதால் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் தங்கள் குழந்தைகளை சிறுவர் பூங்காவுக்குள் செல்ல அனுமதிக்காமல் முகம் சுழித்தவாறு சென்றனர்.

    இதுபோன்ற சமூக விரோத செயல்களால் ஒகேனக்கல் வருகை தரும் சுற்றுலா பகுதிகளில் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதால் புகழ்பெற்ற சுற்றுலா தளம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி கலை இழந்துள்ளது.

    தருமபுரி மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் ஒகேனக்கல் சுற்றுலாத்தலத்தை மேம்படுத்துகிறோம் என்று சொல்லி வரும் நிலையில் நாளுக்கு நாள் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

    இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்துகின்றனர்.

    Next Story
    ×