என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி :பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் ஏ.எஸ்.பி. நேரில் விசாரணை
- துப்பாக்கி நடந்த இடத்தை தேனி மாவட்ட எஸ்.பி. பிரவீன்உமேஷ் டோங்கரே, உத்தமபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராமநாதன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
- ஏ.எஸ்.பி. விவேகானந்தன் உயிரிழந்த ஈஸ்வரன் குடும்பத்தினரிடம் நேரடியாக விசாரணை மேற்கொண்டார்.
கம்பம்:
தேனி மாவட்டம் கூடலூர் வனச்சரகத்திற்கு ட்பட்ட லோயர்கேம்ப், கப்பாமடை பீட்டு, வண்ணாத்திப்பாறை, காப்புக்காடு, முடாரிசரகம் ஆகிய பகுதிகளில் ஒருசிலர் அனுமதியின்றி மின் வேலி அமைத்து வன விலங்குகளை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு புகார்கள் வந்தன.
இதனையடுத்து வனவர் திருமுருகன் தலைமையில் வனக்காப்பாளர் உள்ளிட்ட வனத்துறையினர் அப்பகுதியில் கடந்த மாதம் 29ந் தேதி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது வனக்காவலரை தாக்க முயன்றதாக கருநாக்கமுத்தன்பட்டியை சேர்ந்த ஈஸ்வரன் (52) என்பவர் மீது துப்பாக்கியால் சுட்டதில் அவர் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் சாலை மறியல், போராட்டங்கள் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட எஸ்.பி. பிரவீன்உமேஷ் டோங்கரே, உத்தமபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராமநாதன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஈஸ்வரன் உடலில் எந்த இடத்தில் குண்டு பாய்ந்தது என்பது குறித்து விசாரணை நடத்தியதுடன் பிரேத பரிசோதனை நடத்தவும் ஒத்துழைப்பு அளிக்க உறவினர்களிடம் பேச்சு வார்த்தை மேற்கொண்டனர். இந்நிலையில் ஏ.எஸ்.பி. விவேகானந்தன் உயிரிழந்த ஈஸ்வரன் குடும்பத்தினரிடம் நேரடியாக விசாரணை மேற்கொண்டார்.
மேலும் கூடலூர் போலீஸ் நிலையத்திலும் ஈஸ்வரன் இறப்பு குறித்து பதியப்பட்ட குற்றப்பத்திரிகை நகலை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து ஈஸ்வரன் இறந்து கிடந்த இடம் மற்றும் சம்மந்தப்பட்ட வனத்துறையினரிடமும் விசாரணை நடத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.