என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மலட்டாறு வாய்க்காலில் மூதாட்டி பிணம்சாலை மறியல் - போலீஸ் நிலையம் முற்றுகை
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் காந்திநகர் பகுதியை சேர்ந்த பாவாடை மனைவி கனகாம்பரம் (வயது 55).இவர் 20-க்கும் மேற்பட்ட மாடுகளை அப்பகுதியில் மேய்ச்சலுக்கு ஓட்டி செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று மதியம் திருவெண்ணைநல்லூர் மலட்டாற்று பகுதிக்கு மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றவர் வீடு திரும்பவில்லை.இதைத் தொடர்ந்து அவருடைய மகன் மற்றும் உறவினர்கள் மாடு மேய்த்துக் கொண்டிருந்த இடத்திற்கு போய் தேடி பார்த்தனர். ஆற்று பகுதியில் பழமையான உரை கிணறு அருகே கனகாம்பரம் வைத்திருந்த வெற்றிலை பாக்கு வைக்கும் சுருக்கு பை, குடை மற்றும் காலனி கிடந்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவி னர்கள், அவர் கிணற்றில் விழுந்திருக்காலம் என கறுதி திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கிணற்றில் இறங்கி தேடினர். அங்கு அவர் விழுந்ததற்கான எந்த தடயமும் இல்லை. கனகாம்பரமும் கிடைக்கவில்லை.இந்நிலையில் இன்று காலை மலட்டாறு வா ய்க்காலில் கனகாம்பரத்தின் உடல் பிணமாக மிதந்தது. அதனை கண்ட பொதுமக்கள் இது குறித்து அவரது மகனுக்கும் திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்க்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர்.அப்போது அங்கு திரண்ட கனகாம்பரத்தின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, கனகாம்பரத்தின் உடலை விழுப்புரம் - திருவெண்ணைநல்லூர் - அரசூர் கூட்டுச்சாலையில் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கிருந்த போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, அதன் அறிக்கை வந்த பிறகு சட்டப்படியான நடவடிக்கை எடுக்க ப்படுமென கூறினர். இதனையேற்ற பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இறந்த கனகாம்பரத்தின் உடலை பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு சென்ற கனகாம்பரத்தில் உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகை யிட்டனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் கனகாம்பரத்தின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் திருவெண்ணைநல்லூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்