search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தை 1-ம் நாளை முன்னிட்டுவீடுகளில் பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபாடு
    X

    ஆட்டுக்காரன்பட்டி பகுதியில் உறவினர்கள் மற்றும் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடும் மகிழ்ந்தனர்.

    தை 1-ம் நாளை முன்னிட்டுவீடுகளில் பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபாடு

    • பொங்கல் வைத்து, பொங்கும் போது “பொங்கலோ பொங்கல்” எனக்கூவி சூரியனுக்கு பொங்கலை படையல் வைத்து குடும்பத்துடன் வழிபட்டனர்.
    • தருமபுரி மாவட்டத்தில் நேற்று தைப்பொங்கலை தமிழர்கள் குடும்பம் குடும்பமாக தங்களது வீடுகளில் வெகு விமர்சியாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

    தருமபுரி,

    தை 1ம் நாளை முன்னிட்டு நேற்று தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடினர். இதையொட்டி நேற்று காலை, 6 மணிக்கு கிராம மக்கள் வீட்டின் முன்பு வண்ணக்கோலமிட்டு, புதுப் பானைகள், புது அரிசு, வெல்லம், அவரைக் கொட்டை, பூசணிக்காய் சேர்த்து பொங்கல் வைத்து, பொங்கும் போது "பொங்கலோ பொங்கல்" எனக்கூவி சூரியனுக்கு பொங்கலை படையல் வைத்து குடும்பத்துடன் வழிபட்டனர்.

    இதே போல், கிருஷ்ணகிரி நகர மக்கள் புத்தாடை உடுத்தி தங்கள் வீட்டின் முன்பும், மாடியிலும், புதுப்பானை, கரும்பு, மஞ்சள் வைத்து பொங்கல் வைத்து சூரியனுக்கு படையலிட்டு வழிபட்டனர். பின்னர் உறவினர்களுக்கு விருந்து படைத்து மகிழ்ந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக பொங்கல் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாட முடியாமல் இருந்த பொதுமக்கள், இந்த ஆண்டு எந்த கட்டுப்பாடுகளும் இன்றி பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் நேற்று கொண்டாடினர்.

    தருமபுரி மாவட்டத்தில் நேற்று தைப்பொங்கலை தமிழர்கள் குடும்பம் குடும்பமாக தங்களது வீடுகளில் வெகு விமர்சியாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

    புது பானையில் பொங்கல் வைத்து கருப்பு கரும்பு வளர்ந்து தழைத்த கிழங்குடன் கூடிய மஞ்சள், மா இலை தோரணம் கட்டி சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

    Next Story
    ×