search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டி ஜெ.எஸ்.எஸ். பார்மசி கல்லூரிக்கு 6-வது இடம்
    X

    ஊட்டி ஜெ.எஸ்.எஸ். பார்மசி கல்லூரிக்கு 6-வது இடம்

    • உயர் கல்வி நிறுவனங்களுக்கான இந்திய தரவரிசை 2022 நிகழ்ச்சி புது டெல்லியில் நடைபெற்றது.
    • ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரி நாட்டின் சிறந்த 10 பார்மசி கல்லூரிகளின் தர வரிசைப் பட்டியலில் தொடர்ந்து 4-ஆவது ஆண்டாக இடம்பெற்றுள்ளது.

    ஊட்டி:

    உயர் கல்வி நிறுவனங்களுக்கான இந்திய தரவரிசை 2022 நிகழ்ச்சி புது டெல்லியில் நடைபெற்றது. இதில் மத்திய அரசின் கல்வித் துறை, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு துறைகளின் மந்திரி ஸ்ரீ தர்மேந்திர பிரதான் வெளியிட்டார்.

    இதில் ஜெ.எஸ் எஸ் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வி கழகம் (நிகர்நிலை பல்கலைக் கழகம்), மைசூரு 34-வது இடம்பெற்று இந்தியாவின் சிறந்த 50 பல்கலைக்கழகங்களின் தரவரிசையைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டுள்ளது.

    ஊட்டி ஜெ.எஸ்.எஸ்.பார்மசி கல்லூரி தேசிய அளவில் 6-வது இடத்தை பெற்றுள்ளது. இதன் மூலம் உதகை ஜெ எஸ் எஸ் பார்மசி கல்லூரி நாட்டின் சிறந்த 10 பார்மசி கல்லூரிகளின் தர வரிசைப் பட்டியலில் தொடர்ந்து 4-ஆவது ஆண்டாக இடம்பெற்றுள்ளது.

    மேலும், நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளான மைசூரு ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரி, மைசூரு ஜெ.எஸ்.எஸ். பல் மருத்துவ கல்லூரி, மைசூரு ஜெ.எஸ்.எஸ்.மருத்துவ கல்லூரி ஆகியவை முறையே 8-வது, 12-வது மற்றும் 34-வது இடங்களை தத்தமது பிரிவுகளில் பெற்றுள்ளன.

    இந்த நிகழ்ச்சியில் ஜெ.எஸ்.எஸ். பார்மசி கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ்.பி. தனபால் மற்றும் கல்லூரியின் தேசிய தரவரிசை அலுவலக அதிகாரி முனைவர் கே.பி.அருண் ஆகியோர் கலந்து கொண்டு விருதினை பெற்றனர்.

    இந்த விருதினை பெற உறுதுணையாக இருந்த நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜெகத்குரு சிவராத்ரி தேசிகேந்திர சுவாமிகள், இணை வேந்தர் முனைவர் பி.சுரேஷ், துணை வேந்தர் மருத்துவர் சுரீந்தர் சிங், பதிவாளர் மருத்துவர் பி.மஞ்சுநாத், மற்றும் அனைத்து அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.பி.தனபால் நன்றி தெரிவித்தார்.

    Next Story
    ×