search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க உத்தரவு
    X

    கோப்புபடம்

    அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க உத்தரவு

    • ஜூலை 1 முதல் நியமிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    • 1,750 மாணவர்களுக்கு, 28 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளன.

    திருப்பூர் :

    திருப்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலம் தற்காலிகமாக நியமிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    ஊரடங்குக்கு பிறகு முழுமையான கல்வியாண்டு துவங்கியுள்ளது. மாணவர் சேர்க்கை அதிகரித்தபோதும், போதிய ஆசிரியர்கள் இல்லாதது குறையாகவே உள்ளது.

    சமீபத்திய பொதுத்தேர்வு முடிவுகள் தேர்ச்சி விகிதம் குறைய இதுவும் முக்கிய காரணம்.இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிகமாக நிரப்ப, கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

    ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்களைக் கொண்டு, வரும் ஜூலை 1 முதல் நியமிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இடைநிலை ஆசிரியர்களுக்கு, 7 ஆயிரத்து500 ரூபாய், பட்டதாரி ஆசிரியர்களுக்கு 10 ஆயிரம், முதுகலை ஆசிரியர்களுக்கு 12 ஆயிரமும் தொகுப்பூதியம் வழங்கப்படும்.திருப்பூர் மாவட்டத்தில் 203 இடைநிலை ஆசிரியர், 54 பட்டதாரி ஆசிரியர், 89 முதுகலை ஆசிரியர் என 343 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான பள்ளி மேலாண்மை குழு ஆலோசனை கூட்டம் அனைத்து தொடக்க, நடுநிலைப்பள்ளிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது.

    திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்,காலியிடங்கள் சம்பந்தப்பட்ட பாடத்திற்கான முழுமையான கல்வித்தகுதி பெற்றவரை கொண்டே நிரப்பப்படும். முதுகலை ஆசிரியர் நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கும், 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தில் பணிபுரியும் தகுதிவாய்ந்த தன்னார்வலர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.பணியிடத்திற்கு பதவி உயர்வு மூலமாகவோ, நேரடி நியமனம் அல்லது மாறுதல் மூலமாகவோ நிரப்பப்படும்போது, பள்ளி மேலாண்மை குழு மூலம் நியமனம் ஆன ஆசிரியர் உடனே பணியில் இருந்து விடுவிக்கப்படுவர் என்றனர்.

    15 வேலம்பாளையம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராதாமணி கூறியதாவது:-

    பணி மாறுதல், பணி ஓய்வு உள்ளிட்ட காரணங்களால் ஏற்கனவே உள்ள ஆசிரியர் பணியிடங்களே காலிப்பணியிடங்களாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதை நிரப்பவே சமீபத்தில் அரசாணையில் சொல்கிறது. இவற்றை தற்காலிகமாக நிரப்பினால் மட்டும் போதாது.மாணவர் - ஆசிரியர் விகிதாசாரம் அடிப்படையில் புதிய ஆசிரியர் பணியிடங்கள் தேவைப்படுகின்றன. அவை புதிதாக உருவாக்கப்பட வேண்டும். எங்கள் பள்ளியில் 1-ம் வகுப்பு வரை, 1,750 மாணவர்களுக்கு, 28 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளன.காலிப்பணியிடங்கள் போக மாணவர்களுக்கு கற்பிக்க 7 இடைநிலை, 8 பட்டதாரி ஆசிரியர்கள் தேவை. இதை நிரப்பவும் அரசு அனுமதி வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை பள்ளி மேலாண்மை குழு மூலம் நிறைவேற்றியுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×