search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மானியதள்ளி கிராமத்தில் கடைகளை இடித்து கொலை மிரட்டல் விடுத்த ஊராட்சி மன்ற தலைவர்  வியாபாரி கலெக்டரிடம் மனு
    X

    புகார் கொடுக்க நாகராஜன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தபோது எடுத்த படம்.

    மானியதள்ளி கிராமத்தில் கடைகளை இடித்து கொலை மிரட்டல் விடுத்த ஊராட்சி மன்ற தலைவர் வியாபாரி கலெக்டரிடம் மனு

    • ஜே.சி.பி எந்திரம் மூலம் அடியாட்களுடன் வந்து பஞ்சாயத்து தலைவர் கடைகளை இடித்துள்ளார்.
    • ரூ.15 லட்சம் மதிப்பிற்கு மேல் எனக்கு இழப்பை ஏற்படுத்தி உள்ளார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட மானியதள்ளி கிராமத்தைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் கலெக்டரிடம் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே மானிய தள்ளி கிராமத்தில் வசித்து வருகிறேன். எனக்கு சொந்தமான இரண்டு கடைகள் உள்ளது. அதில் எலக்ட்ரிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடையும் நடத்தி வந்தேன். அந்த கடைகளை சட்ட விரோதமாக ஜே.சி.பி எந்திரம் மூலம் அராஜக முறையில் அடியாட்க ளுடன் வந்து பஞ்சாயத்து தலைவர் இடித்துள்ளார். மேலும் கடைகளில் இருந்து எனது உடைமைகளை முற்றிலும் அழித்து மின் இணைப்பு சாதனங்கள் உட்பட அனைத்து பொருட்களையும் நொறுக்கி, சுமார் ரூ.15 லட்சம் மதிப்பிற்கு மேல் எனக்கு இழப்பை ஏற்படுத்தி உள்ளார்.

    எங்கள் குடும்பத்திற்கு கொலைமிரட்டலும் விடுத்து எங்கள் வாழ்வா தாரத்தை அழித்துள்ளார். எனவே பஞ்சாயத்து தலைவர் மீது தொப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

    இதுகுறித்து தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி உரிய விசாரணை மேற்கொண்டு பஞ்சாயத்து தலைவர் மீதும், அவர்களது அடியாட்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே இடத்தில் கடைகளை கட்டிக் கொடுக்க ஆவனம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.

    Next Story
    ×