search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் இன்று நடந்தது.

    மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    • தொடர்ந்து மூலவர் முருகனுக்கு பால், தயிர், இளநீர் ஆகியன கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
    • கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

    விழுப்புரம்:

    மயிலத்தில் உள்ள மலைமீது பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது.இங்கு முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் காட்சி அளித்து வருகிறார் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா இங்கு வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா இன்று தொடங்கியது. இதையொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்ப ட்டது. தொடர்ந்து மூலவர் முருகனுக்கு பால், தயிர், இளநீர் ஆகியன கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தங்க கவசம் அணிந்து மலர் அலங்காரத்தில் வள்ளி-தெய்வானையுடன் முருகர் பக்தர்களுக்கு அருள்பா லித்தார். இதை தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேக, அலங்காரங்கள் செய்யப்பட்டது. பின்னர் காலை 7 மணி அளவில் வள்ளி-தெய்வானையுடன் வெள்ளி கவசத்தில் விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் பல்லக்கில் அங்குள்ள கொடிமரம் முன்பு எழுந்தருளினர். பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடை பெற்றது. 7 .15 மணிக்கு அர்ச்ச கர்கள் வேத மந்திரங்கள் முழங்க மயிலம் பொம்மபுர ஆதீனத்தின் 20-ம் பட்ட சிவஞான பாலைய சுவாமிகள் மயில் உருவம் பொறிக்கப்பட்ட துவஜா யோகம் என்னும் கொடியை ஏற்றினார். அப்போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் கொடிமரத்துக்கு மகாதீபாராதனை நடந்தது விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் இதை தொடர்ந்து இரவு சூரியபிரபை வாகனத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகன் எழுந்தருளி மலைவலக்காட்சி நடைபெறும் இதற்கான ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலைய சுவாமிகள் செய்திருந்தனர் 2-ம் நாள் திருவிழாவான நாளை 28-ந் தேதி (வியாழக்கிழமை) இரவு ஆட்டுக்கிடா வாகனத்திலும் 29-ந் தேதி இரவு பூதவாகனத்திலும், 30-ந் தேதி நாக வாகனத்திலும், 31-ந் தேதி தங்க மயில் வாகனத்திலும், 1-ம் தேதி யானை வாகனத்திலும், 2-ந் தேதி வெள்ளி மயில் வாகனத்திலும் 3-ந் தேதி இரவு திருக்கல்யாணம் வெள்ளி குதிரை வாகனத்தில் மலைவல காட்சி நடக்கிறது. விழாவின் சிகர விழாவான தேரோட்டம், வருகிற 4-ந் தேதி செவ்வாய்க்கிழமை பங்குனி உத்திரம், அன்று காலை 6 மணிக்கு தேரேட்டம் நடக்கிறது. இதைனை தொடர்ந்து 5-ந் தேதி தெப்ப உற்ச்சவம், 6-ந் தேதி முத்து பல்லக்கு உற்சவம், 7-ந் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவம் நடக்கிறது.

    Next Story
    ×