search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    திருவண்ணாமலைக்கு செல்ல போதுமான  பஸ்கள் இல்லாததால் பயணிகள் கடும் அவதி
    X

    திருவண்ணாமலைக்கு செல்ல போதுமான பஸ்கள் இல்லாததால் பயணிகள் கடும் அவதி

    • தருமபுரியில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்ல போதுமான பஸ்கள் இல்லாததால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
    • 2000 பேர் காத்திருந்தனர்.

    கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் 2668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்நிலையில் தருமபுரி மாவட்டத்திலிருந்து நேற்று முன்தினம் இரவு முதல் பக்தர்கள் திருவண்ணா மலைக்கு பேருந்து மூலம் பயணித்தனர். இந்நிலையில் நேற்று தருமபுரி பேருந்து நிலையத்திலிருந்து போதுமான பேருந்துகள் இல்லாததால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து கோவிலுக்கு செல்லும் நிலை இருந்தது.

    மேலும் நேற்று காலை முதல் 60 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் மேலும் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டுமென பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து பயணிகள் கூறும்போது:-

    மாத மாதம் நாங்கள் கிரிவலத்திற்கு செல்வோம். இந்த மாதம் போதிய பேருந்து இல்லாததால் பஸ் நிலையத்தில் 2000 பேருக்கு மேல் காத்திருக்கிறோம். ஐந்து கிலோ மீட்ட முக்கிய கார்த்திகை தீப திருநாளில் கிரிவலம் செல்லாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது என்று தெரிவித்தார்.

    முக்கிய பண்டிகை காலங்களில் அரசு போக்குவரத்து கழகம் பயணிகளுக்காக பேருந்துகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். சில தடங்களில் செல்லும் பேருந்துகள் காலாவதியாகி ஓட்டை உடைச்சலுமாக உள்ளது. அவைகளை மாற்றி பயணிகளுக்கு தேவையான பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×