search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டுப்பாளையம்- நெல்லை ரெயிலை மீண்டும் இயக்க பயணிகள் கோரிக்கை
    X

    மேட்டுப்பாளையம்- நெல்லை ரெயிலை மீண்டும் இயக்க பயணிகள் கோரிக்கை

    • 3 மாத காலம் மேட்டுப்பாளையம்,நெல்லை ரெயில் இயக்கப்பட்டது.
    • மேட்டுப்பாளையம்- நெல்லை வாராந் திர ரெயில் 5 வாரங்களுக்கு மட்டுமே நீட்டிக்கப்பட டது.

    கோவை

    மேட்டுப்பாளையம் -நெல்லை வாராந்திர ரெயில்,பயணிகளின் கோரிக் கையை ஏற்று கோடை விடுமுறையை முன்னிட்டு கடந்த மே மாதம் முதல் 3 மாத காலம் மேட்டுப்பாளையம், கோவை, பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், மதுரை, சிவகாசி தென்காசி வழியாக நெல்லைக்கு இயக்கப்பட்டது.

    வெள்ளிக்கிழமை இரவு 7.45 மணிக்கு மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரெயில் மறுநாள் சனிக்கிழமை காலை 7.45 மணிக்கு நெல்லையை அடையும்.

    மறுமார்க்கத்தில் நெல்லையில் இருந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும் இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 7.45 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்து சேரும். 3 மாத காலத்துக்கு மட்டுமே அறிவிக்கப்பட்ட இந்த ரெயில் கடந்த ஜூலை மாதம் 8-ந் தேதி முதல் ரத்து செய்யப்பட்டது. இதற்கு ரெயில் பயணிகள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.

    மேலும் 70 சதவீத பயணிகளுடன் சென்ற இந்த ரெயில் ஏன் ரத்து செய்யப்பட்டது என்று ரெயில் பயணிகள் சங்கங்கள் தரப்பில் கண்டனம் எழுப்ப பட்டது. இதை தொடர்ந்து அந்த வாராந்திர ரெயில் ஜூலை மாதம்21-ந் தேதி முதல் ஆகஸ்ட் 19-ந் தேதி வரை 5 வார காலத்துக்கு நீட்டிக்கப்பட்டது. அது நேற்றுடன் முடிவடைந்து. மீண்டும் அந்த ரெயிலை இயக்குவது குறித்து அறிவிப்பு ஏதும் இல்லாத தால் மேட்டுப்பாளையம்- நெல்லை ரெயில் 2-வது முறையாகரத்து செய்யப்பட்டுள்ளது. இனி அடுத்த வாரம் அந்த ரெயில் இயக்கப்படாது. இது ெரயில் பயணிகளிடையே மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

    மேட்டுப்பாளையம்- நெல்லை ரெயிலில் கடந்த 2 வாரங்களாக முன் பதிவுக்கு டிக்கெட் கிடைக்காமல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. எனவே ரெயில்வேக்கு அதிக வருமானம் ஈட்டித் தரும் அந்தரெயிலை நீட்டிக்காமல் ரெயில்வே நிர்வாகம் மவுனமாக உள்ளது. ஆனால் கேரள மாநிலம் எர்ணாகுளத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு இயக் கப்பட்டு வரும் வாராந் திர ரெயில் கடந்த ஜூலை மாதம் 12-ந் தேதி முதல் 5 மாதங்களுக்கு நீட்டித்து. அதாவது நவம்பர் மாதம் வரை நீட்டித்து தென்னக ரெயில்வே உத்தரவிட்டது.

    ஆனால் அதே மாதம் நீட்டிக்கப்பட்ட மேட்டுப்பாளையம்- நெல்லை வாராந் திர ரெயில் 5 வாரங்களுக்கு மட்டுமே நீட்டிக்கப்பட டது. அதன்பிறகு நீட்டிப்பது பற்றி எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.இதில் தென்னக ரெயில்வே பாரபட்சத்துடன் நடப்பதோடு மட்டு மல்லாமல் கோவையை வஞ்சிப்பதாகவும் தெரிகிறது. எனவே ரெயில்வேக்கு அதிக வருமானம் ஈட்டித் தரும் மேட்டுப்பாளையம்- நெல்லை வாராந்திர ரெயிலை மீண்டும் இயக்குவ தோடு மட்டுமல்லாமல் அதை நிரந்தர ரெயிலாகவும் மாற்ற வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    Next Story
    ×