என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கழிப்பறை கட்ட எதிர்ப்பு கூடலூர் நகராட்சியில் திடீர் முற்றுகை போராட்டம்
- குள்ளப்பகவுண்டன் பட்டியில் ரூ.24 லட்சம் மதிப்பில் ஆண்களுக்கான கழிப்பறை கட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பணிகள் தொடங்கியது.
- பெண்கள் நகராட்சி அலுவலகத்துக்கு வந்து ஆண்களுக்கான கழிப்பறையை வேறு இடத்தில் கட்டுமாறு கூறி எதிர்ப்பு தெரிவித்தால் பரபரப்பு ஏற்பட்டது.
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சி 6-வது வார்டு குள்ளப்பகவுண்டன் பட்டியில் ரூ.24 லட்சம் மதிப்பில் ஆண்களுக்கான கழிப்பறை கட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பணிகள் தொடங்கியது.
இப்பகுதியில் குடியிருப்புகள் அதிகம் இருப்பதாலும் ஏற்கனவே பெண்கள் கழிப்பிடமும் இதே பகுதியில் இருப்பதாலும் இங்கு ஆண்களுக்கான கழிப்பறை கட்டக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனால் அந்த பணிகள் பாதியிலேயே நின்று போனது. இந்நிலையில் ஆண்களுக்கான கழிப்பறையை விரைந்து கட்டி முடிக்க வேண்டும் என கூறி ஏராளமான ஆண்கள் நகராட்சி அலுவலகத்தில் திரண்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் பெண்கள் நகராட்சி அலுவலகத்துக்கு வந்து ஆண்களுக்கான கழிப்பறையை வேறு இடத்தில் கட்டுமாறு கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்பினரும் நகராட்சி ஆணையாளர் காஞ்சனாவிடம் மனு அளித்தனர்.
இதனையடுத்து இருவரும் பேசி முடிவு செய்து கழிப்பறை வேண்டுமா? வேண்டாமா? என தீர்மானித்து பதில் அளிக்குமாறு கூறி அவர்களை அனுப்பி வைத்தார். இச்சம்பவத்தால் நகராட்சி அலுவலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.