search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    10-ம் வகுப்பு பொதுதேர்வு; முதல்நாளில் 160 பேர் ஆப்சென்ட்
    X

    10-ம் வகுப்பு பொதுதேர்வு; முதல்நாளில் 160 பேர் ஆப்சென்ட்

    • 10-ம் வகுப்பு பொதுதேர்வு முதல்நாளில் 160 பேர் தேர்வு எழுதவில்லை
    • 60 பறக்கும்படை மற்றும் 540 தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் என மொத்தம் 600 பேர் தேர்வு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

    பெரம்பலூர்

    தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. 10-ம் வகுப்பு அரசு தேர்வு நேற்று துவங்கியது. இந்த தேர்வில் பெரம்பலூர் மாவட்டத்தில் 143 பள்ளிகளை சேர்ந்த 4 ஆயிரத்து 288 மாணவர்களும், 3 ஆயிரத்து 905 மாணவிகளும் என மொத்தம் 8 ஆயிரத்து 193 பேர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்தனர். இவர்கள் தேர்வு எழுதுவதற்காக 41 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 60 பறக்கும்படை மற்றும் 540 தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் என மொத்தம் 600 பேர் தேர்வு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

    அனைத்து தேர்வு மையங்களிலும் போதிய அடிப்படை வசதிகள், மாணவ, மாணவிகள் தேர்வு மையங்களுக்கு எளிதில் சென்று வர போதிய பஸ் வசதிகள், வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்களை பாதுகாப்பாக கொண்டு செல்ல போலீஸ் பாதுகாப்பு போன்ற பணிகள் செய்யப்பட்டிருந்தன. நேற்று நடந்த தமிழ்பாட தேர்வினை 4 ஆயிரத்து 172 மாணவர்களும், 3 ஆயிரத்து 861 மாணவிகளும் என மொத்தம் 8 ஆயிரத்து 33 பேர் தேர்வெழுதினர். 116 மாணவர்களும், 44 மாணவிகளும் என மொத்தம் 160 பேர் தேர்வெழுத வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×