search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கிராம காவல் என்ற புதிய திட்டம் தொடக்கம்
    X

    "கிராம காவல்" என்ற புதிய திட்டம் தொடக்கம்

    கிராம காவல் திட்டத்தை எஸ்.பி ஷ்யாம்ளாதேவி தொடங்கி வைத்தார்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டத்தில் காவல்து றையினருக்கும் பொது மக்களுக்கும் இடையே நல்லுறவை வளர்க்கும் வகையில் "கிராம காவல்" என்ற புதிய திட்டத்தை எஸ்பி ஷ்யாம்ளாதேவி தொடங்கி வைத்து அவர் பேசுகையில்:-பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினருக்கும் பொது மக்களுக்கும் இடையே நல்லுறவை வளர்க்கும் வகையில் "கிராம காவல்" திட்டம் ஏற்படு த்தப்பட்டு தொடங்க ப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் மாவட்டத்தில் உள்ள தாய்க்கிராமம் அதன் சேய்கிராமம் என மொத்தம் 146 கிராமங்களுக்கும் தலா ஒரு போலீசாரை நியமித்து அந்த போலீசார் வாரம் ஒருமுறை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராமங்களுக்கு சென்று அந்தந்த கிராம மக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களது கோரிக்கைகளை எனது (எஸ்பி ) பார்வைக்கு கொண்டு செல்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.இந்த திட்டத்தின் மூலம் கிராமங்களில் சந்தேகப்ப டும்படியான நபர்கள் யாரேனும் சுற்றித்திறிந்தால் உடனடியாக காவல்து றையினருக்கு தகவல் தெரிவி க்கப்பட்டு குற்றங்கள் தடுக்கவும், குற்ற ச்செயல்களில் ஈடுபடு வோரின் தகவல்களை சேகரிப்பதன் மூலம் நடந்த குற்றங்களை கண்டறியவும், குற்றம் நடக்காமல் தடுக்கவும் ஏதுவாக இருக்கும்.ஒவ்வொரு கிரா மத்திற்கும் காவல்துறையினர் கிராம பொதுமக்கள் என அனைவரும் இணைத்து ஒரு வாட்ஸ் அப் குழு உருவாக்கப்பட்டு தகவல்கள் அனைத்தும் அதில் சேகரிக்கபட்டு குற்ற செயல்களை தடுப்பது இதன் மற்றுமொரு நோக்கமாகும். மேலும் இத்திட்டதின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், பாடாலூர், மருவத்தூர், அரும்பாவூர், குன்னம், மங்களமேடு, வ.களத்தூர், கை.களத்தூர் ஆகிய 8 போலீஸ் ஸ்டேசன்கள் எல்லை க்குட்பட்ட பகுதிகளில் மொத்தம் 146 வாட்ஸ்அப் குழுக்கள் தொடங்க ப்பட்டு தகவல்கள் பரிமா ற்றப்படும்.இந்த ஒவ்வொரு வாட்ஸ்அப் குழுவிலும் அந்தந்த கிராமத்திற்கு ஒதுக்கப்பட்ட போலீசார், போலீஸ் ஸ்டேசன் அதிகாரிகள் கிராமத்தில் முக்கிய நபர்கள் மற்றும் தன்னா ர்வலர்கள் மாணவர்கள், பொது மக்கள் என அனைவரும் இடம்பெறுவர்.இத்திட்டம் குற்ற சம்பவங்களை குறைக்கும் நோக்கத்தோடும், பொது மக்களையும் காவல்துறை யினரையும் இணைக்கும் பாலம் போல் இத்திட்டம் செயல்படும். மேலும் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான இடைவெளி குறைக்கப்பட்டு ஒரு இணக்கமான சூழ்நிலை உருவாகும் என தெரிவித்தார். நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பிக்கள் மதியழகன் (தலைமையிடம்), பாண்டியன் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு) மற்றும் டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெ க்டர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×