search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊழல் தடுப்பு வார விழிப்புணர்வு முகாம்
    X

    ஊழல் தடுப்பு வார விழிப்புணர்வு முகாம்

    • பெரம்பலூரில் ஊழல் தடுப்பு வார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
    • மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர்கள் ராமேஸ்வரி, விஜயலட்சுமி பதிலளித்தனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் ஊழல் தடுப்பு வாரத்தையொட்டி விழிப்புணர்வு முகாம் நடந்தது.

    முகாமிற்கு பள்ளி தலைமையாசிரியர் முத்துசாமி தலைமை வகித்தார். லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர்கள் ராமேஸ்வரி, விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கல்வி அலுவலர் ஜெகநாதன் பேசினார்.லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஹேமச்சித்ரா பேசுகையில்,

    பொதுமக்கள் நினைத்தால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும். எனவே லஞ்சம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். லஞ்சம் கேட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது பெரம்பலூரில் வெங்கடாஜலபதி நகரில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 95006 05027, 94981 06692, 86103 74314 என்ற எண்ணிலோ தகவல் தெரிவித்து புகார் அளிக்கவேண்டும். ஊழல், லஞ்சம் சம்பந்தமாக தகவல் அல்லது புகார் தெரிவிப்பவர்கள் விபரம் ரகசியம் காக்கப்படும் என தெரிவித்தார்.

    தொடர்ந்து மாணவ,மாணவிகளின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்பட்டது. சிறந்த கேள்வி கேட்ட மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் மனோகரன் மற்றும் ஆசிரியர்கள் ,மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×