search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    அரசு பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
    X

    அரசு பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

    • பூலாம்பாடி அரசு பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டப்பட்டது
    • தொழிலதிபர் டத்தோ பிரகதீஸ்குமார் கொடியேற்றினார்

    அரும்பாவூர்

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள பூலாம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு அப்பள்ளியின் முன்னாள் மாணவரும் சர்வதேச தொழிலதிபருமான டத்தோ பிரகதீஸ்குமார் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றிவைத்து மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசும்போது, நான் பயின்ற பள்ளிக்கே சிறப்பு விருந்தினராக வந்தது பெருமையாகவும் சந்தோசமாகவும் இருக்கிறது.என்னைப்போல இங்குள்ள பெரும்பாலானோர் பயின்றது இந்த பள்ளிதான்.பெற்றோரிடம் இருப்பதை விட ஆசிரியரிடமே அதிகநேரம் இருக்கிறோம்.நாங்கள் படிக்கும் போதெல்லாம் பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும் போது என்பையன் நல்லா படிக்கனும் அடிச்சு சொல்லிக்கொடுங்க என்பார்கள்.ஆனால் இன்று அடித்தால் ஏன் என் பையனை அடித்தீர்கள் என பெற்றோர்கள் கேள்விகேட்கிறார்கள் அது பெற்றோர்கள் செய்யும் தவறு.இன்றைய காலக்கட்டத்தில் மரியாதை பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை சொல்லித்தருவது ஆசிரியர்கள் தான்.பெரம்பலூர் மாவட்டத்திலேயேசிறந்த பள்ளி என பூலாம்பாடி மேல்நிலைப்பள்ளி என்ற பெயர் எடுக்க வேண்டும்.அதற்கு என்னால் முடிந்ததை செய்து தருகிறேன்.மாணவர்கள் ஒவ்வொருவரும் சாதிக்ககூடியவர்கள் தான்.உங்களதுவாழ்க்கையை நீங்கள் முடிவுசெய்யனும்.இன்றைய காலத்தில் படிப்புதான் மிக முக்கியம்.படிப்பு இல்லாமல் அடுத்த கட்டத்திற்கு போக முடியாது.இன்று நீங்கள் கஷ்டப்பட்டால் பின்னால் நன்றாக இருக்க முடியும்.என்னைப்போ லநீங்களும் இதே பள்ளியில் சிறப்பு விருந்தினராக வரவேண்டும்.என்னால் முடிந்தது உங்களாலேயும் முடியும்.மாணவர்கள் ஆசிரியர்களுக்கு ஒத்துழைப்புநல்க வேண்டும்.மலேசியாவில் அரசுபள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே அரசுவேலை.அதே போல் கூடிய சீக்கிரம் இந்தியாவிலேயும் வரும் என எதிர்பார்க்கிறேன்.அரசுபள்ளி ஆசிரியர்கள் அவர்களது பிள்ளைகளை அரசுபள்ளியில் சேர்த்தாலே ஊரில் உள்ள அனைவரும் அவர்களது பிள்ளைகளை அரசுபள்ளியில் சேர்ப்பார்கள் என்றார்.

    முன்னதாக டத்தோ பிரகதீஸ்குமார் அவர்களுக்கு சாரண சாரணிய இயக்க மாணவர்கள் வரவேற்பு கொடுத்தனர்.நிகழ்ச்சியின் ஒருபகுதியாக மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.விழாவில் தொழிலதிபர்கள் இசைபாலு, டிகேஎஸ் ரமேஸ், பள்ளிதலைமை ஆசிரியர் முருகேசன், உள்ளிட்ட ஆசிரியர்களும், பேரூராட்சி தலைவர் பாக்கியலெட்சுமி செங்குட்டுவன், மாணவர்கள் உட்பட பொதுமக்கள் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×