search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிரம்மரிஷி மலையில் கார்த்திகை தீப திருவிழா
    X

    பிரம்மரிஷி மலையில் கார்த்திகை தீப திருவிழா

    • பெரம்பலூர் பிரம்மரிஷி மலையில் கார்த்திகை தீப திருவிழா நடைபெற்றது
    • சொக்கப்பனை என்கின்ற சுடலை கொளுத்தப்பட்டது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் பிரம்ம ரிஷி மலையில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி மகாதீபம் ஏற்றப்பட்டது.

    எளம்பலூர் மகா சித்தர்கள் அறக்கட்டளை சார்பில், உலக மக்கள் நலன் கருதியும், இயற்கை சீற்றங்களிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டியும், ஒவ்வொரு ஆண்டும் பிரம்மரிஷி மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. இதன்படி 41வது ஆண்டு மகாதீப திருவிழாவை யொட்டி எளம்பலூர் காகன்னை ஈஸ்வரர் கோயிலில் கோ மாதா பூஜை, அஸ்வ பூஜை நடந்தது. தொடர்ந்து பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வ ரர் கோயிலில் 5 அடி உயர மகா தீப செம்பு கொப்பரை வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு ஊர்வலமாக பிரம்மரிஷி மலைக்கு கொண்டு வர ப்பட்டு பிரம்மரிஷ ிமலையாடிவாரத்தில் அமைந்துள்ள காகன்னை ஈஸ்வரர் கோயிலில் வைக்கப்பட்டது. பின்னர் செம்பு கொப்பைரைக்கு பூஜை விழா நடந்தது.

    இதை தொடர்ந்து பிரம்மரிஷி மலையின் மேல் 2 ஆயிரம் மீட்டர் திரி, ஆயிரத்து 8 லிட்டர் நெய்யுடன், நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய் மற்றும் 108 கிலோ கற்பூரம் கொண்டு, 5 அடி உயர செப்புக் கொப்பரையில் மகாதீபத்தை கடலூர் எஸ்பி ராஜாராம், சிவகாமி அதிபன் போஸ் ஆகியோர் ஏற்றிவைத்தனர்.

    அதேவேளையில் எளம்பலூர் பிரம்மரிஷி மலையடி வாரத்தில் அமைந்துள்ள காகன ஈஸ்வரர் கோயிலில் மகா தீபத்தை ஏற்றுதலை தொடங்கி வைத்த எஸ் பி சியாமளாதேவி, பிரபாகரன் எம்எல்ஏ ஆகியோர் ஏற்றி வைத்தனர். அதன் பின்னர் சாதுக்களுக்கு வஸ்திர தானம், காசு தானமும், பொதுமக்களுக்கு அன்னதா னமும் வழங்கப்பட்டது. விழாவில் திட்டக்குடி ராஜன், சன்மார்க்க சங்க தலைவர் சுந்தர்ராஜன், சிவசேனா கொள்கை பரப்புச் செயலாளர் சசிக்கு மார், டாக்டர் ராஜாசிதம்பரம் உட்பட முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை மகா சித்தர்கள் அறக்கட்டளை இணை நிறுவனர் ரோகிணி, தவயோகிகள் சுந்தர மகாலிங்கம், தவசிநாதன் மற்றும் மகா சித்தர்கள் அறக்கட்டளை மெய்யன்பர்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்த னர்.

    பெரம்பலூர் நகரம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சொக்கப்பனை என்கின்ற சுடலை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னிட்டு உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் முடித்து மகாதீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய ஈசன் முன்னிலையில் சொக்கப்பனை எனும் சுடலை கொளுத்தப்பட்டது

    இதேபோல் பெருமாள் கோவில், மரகதவள்ளி தாயார் சமேத மதன கோபால சுவாமி, சஞ்சீவி ராயன் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

    Next Story
    ×