search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    விடுபட்ட சாமி சிலைகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம்
    X

    விடுபட்ட சாமி சிலைகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம்

    • பல லட்சம் ரூபாய் செலவில் சுடு களிமண்ணால் அந்த சாமி சிலைகள் செய்யப்பட்டு, மலைக்கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
    • செல்லியம்மனுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவிலின் உபகோவிலான பெரியசாமி மலைக்கோவில், அருகே உள்ள மலையில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22-ந்தேதி நடைபெற்றது. இந்த நிலையில் 2021-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பெரியசாமி மலைக்கோவிலில் உள்ள சுடு களிமண்ணால் செய்யப்பட்ட சாமி சிலைகளை நாதன் என்பவர் உடைத்து சேதப்படுத்தினார்.அந்த சிலைகளை புதிதாக பிரதிஷ்டை செய்ய பாலாயம் நடத்தப்பட்டு, புதுச்சேரி மாநிலத்தில் பல லட்சம் ரூபாய் செலவில் சுடு களிமண்ணால் அந்த சாமி சிலைகள் செய்யப்பட்டு, மலைக்கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.இதைத்தொடர்ந்து பெரியசாமி மலைக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 27-ந் தேதி நடத்தப்பட்டது. அப்போது செல்லியம்மன் சிலை மட்டும் முறையாக முழுமையாக பிரதிஷ்டை செய்யப்பட்டது. பெரியசாமி உள்ளிட்ட சாமி சிலைகள் முழுமையாக பிரதிஷ்டை செய்யப்படவில்லை. இதனால் செல்லியம்மனுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

    Next Story
    ×