என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பெரம்பலூர் அருகே நொச்சியம் பூவாடையம்மன் கோவில் தேரோட்டம்
- பெரம்பலூர் அருகே நொச்சியம் பூவாடையம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
- மஞ்சள் நீராட்டு தேரினை திரளான பக்தர்கள் தப்பாட்டம், செண்டை மேளம், வாண வேடிக்கை முழங்க வடம் பிடித்து இழுத்தனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே நொச்சியம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பூவாடையம்மன், வேம்படியான், முத்துசாமி ஆகிய சுவாமிகளுக்கு கோவில் உள்ளது. இந்த கோவிலின் தேர் திருவிழா கடந்த மாதம் 30-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் இரவு நேரத்தில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி, நேற்று காலை சிறப்பு அலங்காரத்தில் பூவாடையம்மன், வேம்படியான், முத்துசாமி ஆகிய உற்சவ சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர்.
பின்னர் மதியம் 12 மணியளவில் தேரோட்டம் தொடங்கியது. மஞ்சள் நீராட்டு தேரினை திரளான பக்தர்கள் தப்பாட்டம், செண்டை மேளம், வாண வேடிக்கை முழங்க வடம் பிடித்து இழுத்தனர். தேரோடும் வீதிகளின் வழியாக வலம் வந்த தேர் மாலையில் நிலைக்கு வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று (வியாழக்கிழமை) மாலை மஞ்சள் நீராட்டு மற்றும் சுவாமி குடிவிடுதலுடன் தேர் திருவிழா நிறைவு பெறுகிறது.