என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பெரம்பலூர் மாவட்டம் - கூட்டுறவு சங்க உதவியாளர்கள் பணிக்கான தேர்வு
- கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது.
- பெரம்பலூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் கடந்த மாதம் 10-ந்தேதி இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவித்திருப்ப தாவது:-
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. பெரம்பலூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் கடந்த மாதம் 10-ந்தேதி இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
இத்தேர்வுக்கு தகுதி பெற விண்ணப்பதாரர் ளிடமிருந்து விண்ணப் பங்கள் இணைய தளம் வழியாக மட்டுமே டிசம்பர் 1-ந்தேதி பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படு கின்றன. இதற்கான எழுத்து தேர்வு 24-12 -2023 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, பெரம்பலூர் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தால் நடத்தப்பட உள்ளது.
இதற்கான கல்வி தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவு பயிற்சி ஆகும். மேலும் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி முடித்து தேர்வு முடிவுகள் நிலுவையில் இருப்பவர்க ளும், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் மேலாண்மை நிலையங்க ளில் 2023-24ம் ஆண்டு நேரடி பயிற்சி அஞ்சல் வழி பகுதி நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு சேர்ந்துள்ளவர்க ளும், இப்பணிக்கு உரிய சான்று கட்டணம் செலுத்தி யதற்கான ரசீதினை, பெரம் பலூர் மாவட்ட ஆள்சேர்ப்பு இணைய தளத்தில் பதி வேற்றம் செய்து விண்ணப் பிக்கலாம். முற்பட்ட வகுப்பினருக்கான அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகும். ஏனைய அனைத்து பிரிவினருக்கும் வயது வரம்பு இல்லை. மேலும் இது தொடர்பான விரி வான விவரங்கள் பெரம்ப லூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்