search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 தேர்வில் சுவாமி விவேகானந்தா ெமட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை
    X

    எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 தேர்வில் சுவாமி விவேகானந்தா ெமட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை

    • நடப்பு கல்வி ஆண்டில் 25 ம் ஆண்டில் அடிஎடுத்து வைக்கும் இந்த கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவ மாணவிகள் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்கள்.
    • தற்போது எல்.கே.ஜி. முதல் பிளஸ் 1வரை மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம் கீழப்புலியூர் ஸ்ரீ விவேகானந்தா நகரில் சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் 25 ம் ஆண்டில் அடிஎடுத்து வைக்கும் இந்த கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவ மாணவிகள் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்கள்.

    இந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் என். நவமியா என்ற மாணவி 500க்கு 486 மதிப்பெண்களும், பவதாரணி 482 மதிப்பெண்களும், தரிசனா , ஜனனி , ஸ்ரீராம் ஆகியோர் 480 மதிப்பெண்களும், ஆதித்யா 477 மதிப்பெண்ணும், ஹரிப்ரியா 474 மதிப்பெண்ணும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

    பிளஸ் 2பொதுத் தேர்வில் ஆர்.நிசாந்தினி 600 க்கு 592 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். இவர் தமிழில் 99, ஆங்கிலத்தில் 98, இயற்பியலில் 97, வேதியலில் 100, உயிரியலில் 100, கணிதத்தில் 98 மதிப்பெண்கள் பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக பிரதீபா 587 மதிப்பெண்கள் வாங்கினார். அது மட்டுமல்லாமல் தர்ஷினி 564 ,நல்லுசாமி 563, தர்ஷினி ,ஈஸ்வர் ஆகியோர் 554, வைஷ்ணவி 552 மதிப்பெண்கள் பெற்று அபார சாதனை படைத்தனர்.

    இந்த பள்ளிக்கூடத்தில் அறிவியல் பாடத்தில் 7பேரும், கணித பாடத்தில் ஒருவரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றனர்.

    பள்ளியின் தாளாளர் டாக்டர் பி.முருகேசன் கூறும் போது கடந்த 25 ஆண்டுகளாக சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புலமைப் பெற்ற ஆசிரியர்கள் வாயிலாக கல்வி போதிக்கப்படுகிறது. இதனால் ஆண்டுதோறும் மாணவர்கள் கல்வியில் சாதனை படைத்து வருகின்றனர். தற்போது எல்.கே.ஜி. முதல் பிளஸ் 1வரை மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த கல்வி நிறுவனத்தில் படித்த பல மாணவ மாணவிகள் டாக்டர்கள், இன்ஜினியர்கள் மற்றும் அரசு துறைகளில் உயர் பொறுப்புகளை வகுத்து வருகின்றனர் என பெருமையுடன் கூறினார்.

    Next Story
    ×