என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பெரம்பலூர் முருகன் கோவில்களில் சூரசம் ஹாரம்
- பெரம்பலூர் எளம்ப லூர் சாலையில் உள்ள ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் கந்த சஷ்டி சூரசம் ஹார விழா நடந்தது.
- விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் எளம்ப லூர் சாலையில் உள்ள ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் கந்த சஷ்டி சூரசம் ஹார விழா நடந்தது.
விழாவையொட்டி பாலமுருகனுக்கு பல்வேறு வகையான வாசனை திரவி யங்களால் அபிஷேகங்கள் செ ய்யப்பட்டு மகாதீ பாரதனை காண்பிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தன. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று இரவு சுவாமி திருவீதி உலா நடந்தது. ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியினர் நாகரத்தினம், அர்ச்சுணன் மற்றும் பலர் செய்திருந்தனர்.
பெரம்பலூர் பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் சுப்ரமணியன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் , அலங்காரம் செய்ய ப்பட்டு மகாதீ பாரதனை காண்பி க்கப்பட்டது. பின்னர் சுவாமி திருவீதி உலா வந்து தெப்பக்குளம் பகுதியில் முருகன் அசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இதேபோல் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு எளம்பலூர் பிரம்மரிஷி மலை யடிவாரத்தில் காக ன்னை ஈஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத ஆறுமுக முருகப்பெ ருமானுக்கு 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக செய்ய ப்பட்டு அலங்காரம் செய்ய ப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்க ப்பட்டது.
இதில் ஏராளமான பொது மக்கள் கலந்துகொ ண்டு முருகனை வழிப்ப ட்டனர். பின்னர் அனை வருக்கும் அன்னதானம் வழங்க ப்பட்டது. விழா ஏற்பாடுகளை மகா சித்தர்கள் அறக்கட்டளை இணை நிறுவனர் ரோகிணி மாதாஜி தவயோகி தவசிநாத சுவாமிகள் ஆகியோர் செய்திருந்தனர்.
பெரம்பலூர் மாவ ட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற செட்டிகுளம் பால தண்டாயுதபாணி கோவில், வாலி கண்டபுரம் வாலீ ஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோவில்களில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா நடந்தது.