என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நடப்பாண்டு வங்கிகள் மூலம் ரூ.4,267 கோடி கடன் வழங்க இலக்கு- பெரம்பலூர் கலெக்டர் தகவல்
- தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, தனியார் வங்கி, மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கிராமப்புற வங்கிகள் மூலம் நடப்பு 2022-2023ம் நிதியாண்டில் ரூ. 4 ஆயிரத்து 267 கோடி கடன வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- இந்த நிதியாண்டிற்கான கடன் திட்ட அறிக்கையில் விவசாயத்திற்கு 81 சதவீதமும், சிறு, குறு தொழிலுக்கு 10 சதவீதமும், இதர முன்னுரிமை கடன்களுக்கு 9 சதவீதமும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
பெரம்பலூர்:
பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான வங்கிகள் ஆலோசனை குழு ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை வகித்து கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டு பேசுகையில்,
பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, தனியார் வங்கி, மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கிராமப்புற வங்கிகள் மூலம் நடப்பு 2022-2023ம் நிதியாண்டில் ரூ. 4 ஆயிரத்து 267 கோடி கடன வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் விவசாய கடன்களுக்காக ரூ.3 ஆயிரத்து 470 கோடியும், சிறு, குறு தொழில்களுக்கு ரூ.450 கோடியும், இதர முன்னுரிமை கடன்களுக்கு ரூ. 347 கோடியும் கடனாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ 147 கோடி ரூபாய் வங்கிகளுக்கு கூடுதலான இலக்கு நிர்ணம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதியாண்டிற்கான கடன் திட்ட அறிக்கையில் விவசாயத்திற்கு 81 சதவீதமும், சிறு, குறு தொழிலுக்கு 10 சதவீதமும், இதர முன்னுரிமை கடன்களுக்கு 9 சதவீதமும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடன் திட்ட அறிக்கையின்படி அனைத்து வங்கிகளும் இலக்கினை அடைய முழுவீச்சில் செயல்படவேண்டும். வங்கியாளர்கள் அரசு துறைகளுடன் இணைந்து செயல்பட்டு மாவட்டத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என தெரிவித்தார்.
கூட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தலைமை மண்டல உதவி பொதுமேலாளர் கோடிஸ்வராவ், முன்னோடி வங்கி மேலாளர் பாரத்குமார், நபார்டு வங்கி மாவட்ட மேலாளர் பிரபாகரன், ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநர் ஆனந்தி மற்றும் அனைத்து வங்கி கிளை மேலாளர்கள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்