search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரோந்து போலீசார் பேருந்தை  துரத்தி சென்று ரூ.1.35 லட்சம் ரொக்கம், உடமைகளை மீட்டனர்
    X

    ரோந்து போலீசார் பேருந்தை துரத்தி சென்று ரூ.1.35 லட்சம் ரொக்கம், உடமைகளை மீட்டனர்

    • ரோந்து போலீசார் பேருந்தை ரத்தி சென்று ரூ.1.35 லட்சம் ரொக்கம், உடமைகளை மீட்டு ஒப்படைத்தனர்
    • டீ சாப்பிட இறங்கிய முதியவரை தவிக்க விட்டு சென்ற பஸ்

    பெரம்பலூர்

    சிவகங்கை மாவட்டத்திலிருந்து சென்னை செல்வதற்காக அரசு பஸ்சில் முதியவர் ஒருவர் பயணித்தார். பேருந்து பெரம்பலூர் புதுபஸ்ஸ்டாண்டில் பயணிகளை இறக்குவதற்காக சற்று நேரம் நின்று கொண்டிருந்தது. அப்போது முதியவர் டீ சாப்பிட கீழே இறங்கியுள்ளார். திரும்பி வந்து பார்க்கும் போது தான் வந்த பஸ்சை காணவில்லை எனவும், தன்னுடைய உடைமைகள் அனைத்தும் அந்த பஸ்சில் இருப்பதாகவும், எப்படியாவது கண்டுபிடித்து தாருங்கள் என பெரம்பலூர் புதுபஸ்ஸ்டாண்டில் ரோந்து பணியிலிருந்த சப் இன்ஸ்பெக்டர் பெரியசாமியிடம் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் பெரியசாமி பெரம்பலூர் மாவட்ட நெடுஞ்சாலை ரோந்து எண்1 - ல் பணியிலிருந்து போலீசாரிடம் தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்த சப் இன்ஸ்பெக்டர் ஜெயராமன், போலீசார் சக்திவேல், அரவிந்தன் ஆகியோர்கள் திருமாந்துறை டோல் பிளாசா பகுதியில் சென்று கொண்டிருந்த அந்த அரசு பஸ்சை நிறுத்தி , முதியவரின் பணப்பை மற்றும் உடைமைகள் அடங்கிய பையை எடுத்து பையை பறிக்கொடுத்த முதியவரை வரவழைத்து அவரது உடைகள் மற்றும் அதிலிருந்த பணம் ரூபாய் ஒரு லட்சத்து 35 ஆயிரம் ஆகியவற்றை ஒப்படைத்தும் முதியவரை மீண்டும் சென்னை செல்வதற்கு வேறொரு பஸ்சில் ஏற்றி விட்டனர். முதியவர் தவறவிட்ட ஒரு மணிநேரத்தில் உடைமைகள் மற்றும் பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த தேசிய நெடுஞ்சாலை ரோந்து எண்-1 காவல்துறையினரை எஸ்பி மணி பாராட்டி வாழ்த்தினார்.

    Next Story
    ×