search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    புதுநடுவலூர் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம்
    X

    புதுநடுவலூர் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம்

    • பெரியம்மை நோய் தடுப்பூசிகள் போடப்பட்டது.
    • புதுநடுவலூர் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் புதுநடுவலூர் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளனூரில் சிறப்பு கால்நடை மருத்துவ மற்றும் பராமரிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

    முகாமிற்கு மண்டல இணை இயக்குனர் சுரேஷ் கிறிஸ்டோபர் தலைமை வகித்தார். உதவி இயக்குநர் குணசேகரன் மற்றும் டாக்டர்கள் ஷர்மிளா, மூக்கன், சுப்பிரமணியன், கலியபெருமாள், முத்துசெல்வன் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் கால்நடைகளை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.

    முகாமில் ஊராட்சி தலைவர் ஜெயந்தி, துணை தலைவர் செந்தில்குமார் ஆகியோர் மூன்று சிறந்த கிடேரி கன்றுகளுக்கு ஊக்க பரிசும், சிறந்த கால்நடை பராமரிப்பு முறைகளை கையாளும் விவசாயிகள் மூன்று பேருக்கு சிறப்பு பரிசுகளையும் வழங்கினர்.மேலும் கால்நடைகளுக்கு தாது உப்பு கலவை பைகள் வழங்கப்பட்டது. இதில் கால்நடைகள், கோழிகள் மற்றும் செல்லப்பிராணிகளை பரிசோதனை செய்து தடுப்பூசிபோடுதல், குடற்புழு நீக்கம், செயற்கை கருவூட்டல், ஆண்மை நீக்கம் போன்ற சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன்பெற்றன. மேலும் மாடு மற்றும் கன்றுகளுக்கு பெரியம்மை நோய் தடுப்பூசிகள் போடப்பட்டது.

    Next Story
    ×