என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
முத்திரையிடாத 12 மின்னனு எடை தராசுகள் பறிமுதல்
- முத்திரையிடாத 12 மின்னனு எடை தராசுகள் புறிமுதல் செய்யப்பட்டது
- தொழிலாளர் நலத்துறையினர் நடவடிக்கை
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் தொழிலாளர் நலத்துறையினர் மறுமுத்திரையிடாத 12 மின்னனு எடை தராசுகள் புறிமுதல் செய்தனர்.
பெரம்பலூர் தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) மூர்த்தி தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர் மற்றும் பயிற்சி தொழிலாளர் உதவி ஆய்வாளர் ஆகியோர் கொண்ட குழுவினர் பெரம்பலூர், வாலிகண்டாபுரம், லப்பைகுடிகாடு மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் மீன் மார்கெட், இறைச்சி கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
24 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டதில், 12 மின்னனு தராசுகள் மறுமுத்திரையிடப்படாதது தெரியவந்ததையடுத்து அந்த 12 மின்னனு தராசுகள் பொது பறிமுதல் செய்யப்பட்டு தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிகர்கள் தங்களது எடையளவுகளை குறித்த காலத்தில் முத்திரையிட்டு பயன்படுத்தவேண்டும், முத்திரையிடாத மின்னனு தராசுகளை பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் உதவி ஆணையர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.