search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பலூர் அருகே நடந்த விபத்தில் தலை நசுங்கி பெண் பலி - நிற்காமல் சென்ற லாரியை விரட்டி பிடித்த கிராமத்து இளைஞர்கள்
    X

    பெரம்பலூர் அருகே நடந்த விபத்தில் தலை நசுங்கி பெண் பலி - நிற்காமல் சென்ற லாரியை விரட்டி பிடித்த கிராமத்து இளைஞர்கள்

    • இருவரும் பெரம்பலூர் - அரியலூர் சாலை பேரளி பகுதியில் சென்று கொண்டி ருந்தனர்.
    • அப்போது டிப்பர் லாரியின் சக்கரம் ராதிகாவின் தலை மீது ஏறி உள்ளது.

    குன்னம்

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள பரவாய் கிராமத்தை சேர்ந்தவர் அய்யாவு(வயது 40). இவரின் மனைவி ராதிகா(வயது 36). ராதிகாவின் ஆதார் கார்டில் திருத்தம் செய்வதற்காக, உறவினரான செல்வராஜ்(வயது 45) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் பெரம்பலூரை நோக்கி சென்றுள்ளார். இருவரும் பெரம்பலூர் - அரியலூர் சாலை பேரளி பகுதியில் சென்று கொண்டி ருந்தனர். அப்போது பெரம்பலூரை நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி ஒன்று இருவரும் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி உள்ளது. மோதிய வேகத்தில் செல்வராஜ் தூக்கி எறியப்பட்டு உள்ளார். ராதிகா இருசக்கர வாக னத்துடன் சாலையிலேயே விழுந்துள்ளார். அப்போது டிப்பர் லாரியின் சக்கரம் ராதிகாவின் தலை மீது ஏறி உள்ளது. இதில் ராதிகா தலை சுக்கு நூறாக உடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரி நிற்காமல் சென்றுள்ளது. இதனை கண்ட அப்பகுதி இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் டிப்பர் லாரியை விரட்டி சென்றுள்ளனர். பெரம்பலூர் அருகே கவுல்பாளையத்தில் அந்த டிப்பர் லாரியை கிராமத்து இளைஞர்கள் மடக்கி நிறுத்தி உள்ளனர். விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் சென்ற லாரி டிரைவரை பிடித்து அப்பகுதி இளைஞர்கள் நன்றாக `கவனித்து' அதன் பின்னர் மருவத்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் டிப்பர் லாரி டிரைவரிடம் நடத்திய விசாரணையில் அவர் உடையார் பாளையம் அருகே உள்ள வெட்டுவா வெட்டு கிராமத்தை சேர்ந்த பாலமுருகன்(45) என்பது தெரிய வந்தது. அவர் மீது வழக்கு பதிந்த போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் ராதிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×