search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.5 கோடி பண மோசடி வழக்கில் ஊராட்சி மன்ற தலைவர் கைது
    X

    ரூ.5 கோடி பண மோசடி வழக்கில் ஊராட்சி மன்ற தலைவர் கைது

    • பென்னக்கோணம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டார்
    • விசாரணைக்கு பின்னர் போலீசார் சிறையில் அடைத்தனர்

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்து லப்பை குடிக்காடு அருகேயுள்ள பென்னகோனம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி .இவர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில் இவரது மகன் சந்தோஷ்குமார் துபாயில் டிரேடிங் செய்து ஐந்து சதவீத வட்டி தருவதாக கூறி தொழில் செய்து வந்துள்ளார். இதே தொழிலை பெரம்பலூர் மற்றும் சென்னையில் அலுவலகம் அமைத்து 5 சதவீத வட்டி தருவதாக கூறி சுமார் 1300 கோடி ரூபாய் ஆயிரக்கணக்கான பேரிடம் வசூல் செய்து கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக ஒருவருக்கும் வட்டி தொகை தராததைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்திருந்தனர்.இதன் அடிப்படையில் சந்தோஷ் குமாரின் மனைவி சிவசங்கரி சென்னையில் வைத்து கைது செய்தனர். இந்த நிலையில் பென்னகோணம் ஊராட்சி மன்ற தலைவரும் சந்தோஷ் குமார் என்பவருடைய தாயாருமான ஜெயலட்சுமி மீது மங்களமேடு காவல் நிலையத்தில் சுமார் 5 கோடியே இருவது லட்சம் பண மோசடி புகாரை சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த வினோத்துடன் ஐந்து பேர் புகார் அளித்திருந்தனர் .புகாரை விசாரித்த மங்களமேடு போலீசார் ஜெயலட்சுமியை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததை தொடர்ந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×