search icon
என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • முதியோர் இல்லத்தில் முதியோர் தினவிழா கொண்டாடப்பட்டது
    • மூத்தோர் அனைவரும் பாட்டு பாடி, கதை சொல்லி, ஆட்டம் போட்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்

    பெரம்பலூர்

    முதியோர்தினத்தை யொட்டி பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் சோமண்டாபுதூர் பிரிவு ரோடு அருகே உள்ளே முதுயுகம் முதியோர் இல்லத்தில் முதியோர் தினவிழா நேற்று நடந்தது. விழாவிற்கு ஓய்வு பெற்ற கல்வி அதிகாதி ஜெயராமன் தலைமை வகித்தார். மூத்தோர் அனைவரும் பாட்டு பாடி, கதை சொல்லி, ஆட்டம் போட்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர். நிகழ்வில் பெரம்பலூர் உதிரம் நண்பர்கள் குழுவின் குருதி ஏற்பாட்டாளர் உதிரம் நாகராஜ், தொடர் குருதி கொடையாளர் மகேஸ்குமரன், ஆற்றும் கரங்கள் சிறப்பு இல்ல நிர்வாகி அருண் ஆப்ரஹாம் உட்பட முதியோர் இல்ல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முதுயுகம் இல்ல பணியாளர்கள் செய்திருந்தனர். முன்னதாக மூத்தோர்கள் சார்பாக ராஜேஸ்வரி வரவேற்றார். அபிநந்தன் நன்றி கூறினார்.

    • பெரம்பலூர் நகரில் 4 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்
    • தலைமை நீரேற்று நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என நகராட்சி அறிவிப்பு

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் நகராட்சிக்கு வரும் கொள்ளிடம் குடிநீர் திட்டத்திற்காக தாளக்குடியில் அமைக்கப்பட்டுள்ள தலைமை நீரேற்று நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் நாளை (3ம்தேதி) முதல் 6ம்தேதி முடிய நான்கு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் வழங்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என நகராட்சி ஆணையர் ராமர் தெரிவித்துள்ளார்.

    • பெரம்பலூர், அய்யலூர் கிராமத்தில் உள்ள பஞ்சமாயி அம்மன் கோவிலில் உண்டியல், வெண்கல மணிகள், கலசங்கள் ஆகியவற்றை திருடி சென்றனர்
    • மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே அய்யலூர் கிராமத்தில் ஒரு சமுதாயத்தினருக்கு சொந்தமான பஞ்சமாயி அம்மன் கோவில் காட்டுப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சமீபத்தில் கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது .அப்போது பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்தி உள்ளனர் இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு மர்ம நபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து அங்கிருந்து உண்டியல் மற்றும் வெண்கல மணிகள் கலசங்கள் ஆகியவற்றை திருடி சென்றனர். இவற்றின் மதிப்பு ரூ.7000 இருக்கும் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பெரம்பலூரில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
    • காவிரி தண்ணீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்

    பெரம்பலூர்,

    தமிழகத்திற்கு காவிரி தண்ணீரை தர மறுக்கும் கர்நாடகாவை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் தங்க ரத்தினவேல் தலைமை தாங்கினார். கட்சியின் திருச்சி நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி கண்டன உரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சியினர் தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விட மறுக்கும் கர்நாடக மாநில அரசை கண்டித்தும் இதனை கண்டிக்க தவறிய மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் காவிரி நதிநீர் பிரச்சனைக்கு மத்திய மாநில அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

    • காரை கிராம ஊராட்சி மன்ற செயலாளர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்
    • பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் தெரணி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ்(வயது 52). இவர் காரை கிராம ஊராட்சி மன்ற செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் வீட்டில் இருந்த போது தனது காதில் பூச்சு கொல்லி மருந்து ஊற்றி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதனை கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, இது குறித்து பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேசிய அளவிலான ஜூடோ போட்டி
    • பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளியில் தேசிய அளவிலான ஜூடோ போட்டி

    பெரம்பலூர்,

    தேசிய அளவிலான ஜூடோ போட்டிக்கு, தமிழ்நாடு ஜூடோ அணிகளுக்கான போட்டியானது பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளியில் நடைபெற்றது. தமிழக அளவில் 684 மாணவ மாணவியர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். 14, 17, 19 வயது உட்பட்ட பிரிவில் கலந்து கொண்டு வெற்றி பெறும் மாணவர்கள், தேசிய அளவில் நடைபெறும் போட்டிக்கு பள்ளி கல்வி துறையின் மூலமாக பங்குபெற அனுப்பி வைக்கப்பட உள்ளனர். இதன் துவக்க விழாவிற்கு ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். விழாவில் நிறுவன துணைத்தலைவர் விவேகானந்தன் முதல்வர் கலைச்செல்வி, பெரம்பலூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஸ்வநாதன் உடற்கல்வி இயக்குநர்கள் பாலசுப்ரமணியன், மணி, பாஸ்கர் மற்றும் பல்வேறு பள்ளியை சார்ந்த உடற்கல்வி ஆசிரியர்கள் பொறுப்பாசிரியர்கள் மாணவ,மாணவியர்கள் கலந்துக்கொண்டனர்.

    • கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் ஆதார், குடும்ப அட்டை எண் சமர்ப்பிக்க வேண்டும்
    • பெரம்பலூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அறிக்கை

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;- எதிர்வரும் கூட்டுறவு சங்க தேர்தலை முன்னிட்டு கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர் பட்டியல் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆகவே பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தொடக்க கூட்டுறவு பண்டக சாலைகள், நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, கூட்டுறவு விற்பனை சங்கம்,பணியாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி ஆகியவற்றில் உறுப்பினர்களாக உள்ளவர்களில் இது நாள் வரை தற்போதைய புகைப்படம், ஆதார் எண், குடும்ப அட்டை எண் மற்றும் கைபேசி எண் ஆகிய விவரங்களை வழங்காத உறுப்பினர்கள் ஒரு வார காலத்திற்குள் தங்களது ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் ஆகிய விவரங்களை தாங்கள் உறுப்பினர்களாக உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும். அதனை உரிய காலத்திற்குள் சமர்ப்பிக்க தவறும் பட்சத்தில் தங்களது பெயர் அ. வகுப்பு உறுப்பினர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்படும். இதனால் தாங்கள் வாக்களிக்க இயலாத நிலை மற்றும் தேர்தலில் போட்டியிட இயலாத நிலை ஏற்படும். எனவே மேற்கண்ட வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது புகைப்படம்,ஆதார் எண், குடும்ப அட்டை எண் மற்றும் கைபேசி எண் ஆகிய விவரங்களை ஒரு வார காலத்திற்குள் தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் மாலை அணிவித்து மரியாதை
    • தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் முன்னாள் எம்.எல்.ஏ.வும் மாவட்ட மாணவரணி செயலாளருமான தமிழ்செல்வனை அ.தி.மு.க. மாவட்ட செயலாளராக நியமனம் செய்து கட்சியின் பொதுச் செயலாளர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதை தொடர்ந்து அதிமுக மாவட்ட செயலாளராக பொறுப்பேற்று பெரம்பலூர் திரும்பிய தமிழ்செல்வனுக்கு மாவட்ட எல்லையான திருமாந்துறை டோல் பிளாசவில் அ.தி.மு.க.வினர் சார்பில் சிறப்பான முறையில் வரவேற்பு அளித்தனர். இதை தொடர்ந்து மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன் பெரம்பலூரில் உள்ள அண்ணாதுரை, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர், பேரூர் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காங்கிரஸ் செயற்குழு கூட்டம்
    • இளைஞர் காங்கிரஸ் செயற்குழு


    பெரம்பலூர்,செப்.29-


    பெரம்பலூரில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். காங்கிரஸ் மேலிட பொறுப்பா ளரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான ஜான் அசோக் வரதராஜன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பா ளராக இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் ஸ்ரீதர் பழனி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினர்.


    கூட்டத்தில் வருகிந எம்பி தேர்தலில் பெர ம்பலூர் தொகுதியை காங்கி ரஸ் கட்சிக்கு ஒதிக்கீடு செய்ய வேண்டும். பெர ம்பலூர் மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான ெரயில் சேவை உடனடியாக வழங்க வேண்டும். உட்பட பல தீர்மா னங்கள் நிறைவேற்ற ப்பட்டது.


    இதில் சட்டசபை தொகுதி தலைவர்கள் ராஜா, பார்த்திபன், காங்கிரஸ் ஊடக பிரிவு மாநில செயலாளர் துரை ராஜீவ் காந்தி மற்றும்இ ளைஞர் காங்கிரஸ் நிர்வா கிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


    • மண் திருடிய 2 பேர் கைது
    • லாரி சிறைப்பிடிப்பு


    அகரம்சீகூர்,


    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள மங்களமேடு அருகே வாலிகண்டபுரம் கிராமத்தில் கிராவல் மண் திருடுவதாக போலீசாருக்கு பல்வேறு புகார் வந்தது. அதன்பேரில் மங்களமேடு சப்-இ ன்ஸ்பெக்டர் சரவண க்குமார் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுப ட்டனர். அப்போது வாலிக ண்டபுரத்திலிருந்து பிரம்ம தேசம் செல்லும் வழியில் அரசு அனுமதியின்றி கிரா வல் மண் ஏற்றிச்சென்றது தெரியவருகிறது இதையடுத்து பிரம்மதேசம் கடைத்தெருவை சேர்ந்த இளவரசன் (வயது 41), எளம்பலூர் காட்டு க்கொ ட்டாய் உப்பு ஓடையை சேர்ந்த தண்டபாணி (45) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் டிப்பர் லாரி, பொக்லைன் எந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.


    • விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் பணிக்குழுக்களின் செயற்குழு கூட்டம்
    • விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் பணிக்குழு


    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் அருகேயுள்ள சு.ஆடுதுறையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேப்பூர் வடக்கு ஒன்றிய செயற்குழு கூட்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய மாநில பொறுப்பாளர் தங்கதுரை வருகிற நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். கட்சி தோழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தலைவர் தொல்.திருமாவ ளவனின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்று பேசினார்.அப்போது சனாதானத்தை முழுமையாக எதிர்ப்பது உள்பட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தல் பணிக்குழு விடுதலை செழியன், அரியலூர் ,பெரம்பலூர் மண்டல செயலாளர் அன்பானந்தம், மாவட்ட செயலாளர் (கி) கலையரசன், மாவட்ட செய்தி தொடர்பாளர் உதயகுமார், மண்டல துணை செயலாளர் லெனின், ஸ்டாலின்,முன்னாள் மாவட்ட செயலாளர் தமிழ் மாணிக்கம், மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பிரேம்குமார், தமிழ் குமரன், அண்ணாதுரை, தங்கதுரை , என 100-க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் கலந்துகொண்டனர்.




    • பெரம்பலூர் அதிமுக மாவட்ட செயலாளர் ஆக முன்னாள் எம்எல்ஏ இளமை தமிழ்ச்செல்ன் நியமிக்கப்பட்டு உள்ளார்
    • தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

    பெரம்பலூர், 

    அஇஅதிமுகவின் பெரம்பலூர் மாவட்ட செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ இளம்பை இரா. தமிழ்ச்செல்வனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி. பழனிசாமி நியமனம் செய்து உள்ளார்.இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக தொண்டர்கள் பெரம்பலூர் பழைய, புதிய பேருந்து நிலையம், உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று மாலை பட்டாசு வெடித்து கொண்டாடினர். மேலும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் 3 முறை சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட்டு, 2 முறை எம்.எல்ஏவாக இருந்து உள்ளார். பள்ளி கல்லூரி காலத்தில் இருந்தே அதிமுகவில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். மாவட்ட மாணவரணி செயலாளராக நீண்ட காலம் பதவி வகித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.மாவட்ட செயலாளருக்கு போட்டி இருந்த நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன் மாவட்ட செயலாளராக தேர்வு பெற்றிருப்பது அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அதிமுக மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் மாவட்ட செயலாளர் இளம்பை. இரா.தமிழ்ச்செல்வனுக்கு நேரிலும், தொலைபேசியிலும் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர்.

    ×