search icon
என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    பெரம்பலூரில் பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்

    பெரம்பலூர்,

    தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் மாதந்தோறும் 2-வது சனிக்கிழமையில் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று பெரம்பலூர் வட்டாரத்திற்கு அரணாரை (வடக்கு) ஆலம்பாடி கிராமத்தில் பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி தலைமையில் நடந்தது. கூட்டத்தினை வட்ட வழங்கல் அலுவலர் ஆறுமுகம் முன்னின்று நடத்தினார். இதில் கூட்டுறவு துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். பெரம்பலூர் வட்டாரத்தில் பொது வினியோக திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகள் தொடர்பாகவும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 9 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. அடுத்த பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் அடுத்த மாதம் (அக்டோபர்) 14-ந்தேதி நடைபெறவுள்ளது. முகாம் நடைபெறும் கிராமம் விவரம் பின்னர் தெரிவிக்கப்படும்.

    • கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 25-ந்தேதி மீட்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் தங்கையிடம் ஒப்படைக்கப்பட்டார்
    • கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து, தனது அண்ணனை அழைத்து சென்றார்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 25-ந்தேதி மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த வாலிபரை போலீசார் மீட்டு ஒரு கருணை இல்லத்தில் ஒப்படைத்தனர். அவருக்கு கருணை இல்லத்தில் வைத்து மனநல மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் குணமடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள ஒயிட்பீல்டு பகுதியை சேர்ந்த நித்தின் (வயது 33) என்பதும், அவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியே வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து நித்தின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நித்தினின் தங்கை குசுமா நாராயணரெட்டி பெரம்பலூருக்கு வந்தார். அவரிடம் நித்தினை போலீசாரும், கருணை இல்ல நிர்வாகிகளும் ஒப்படைத்தனர். அவர்களுக்கு குசுமா நாராயணரெட்டி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து, தனது அண்ணனை அழைத்து சென்றார்.

    • பெரம்பலூர் வேலைவாய்ப்பு முகாமில் 287 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது
    • 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு நேர்முக தேர்வு நடத்தின

    பெரம்பலூர்,

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், ரோவர் கல்வி குழுமங்கள் ஆகியவற்றின் சார்பில் மாபெரும் சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், பெரம்பலூர் ரோவர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மற்றும் விரைவில் தொடங்கப்படவுள்ள முன்னணி தனியார் நிறுவனங்களை சேர்ந்தவர்களும், பல்வேறு மாவட்டங்களில் அமைந்துள்ள 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்களை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு தங்களது நிறுவனத்தின் காலிப்பணியிடங்களுக்கு தேவையான ஆட்களை நேர்முக தேர்வு உள்ளிட்டவைகளை நடத்தி தோ்வு செய்தனர். இதில் வேலை நாடுனர்கள் மொத்தம் 2 ஆயிரத்து 147 பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அதில் தேர்வான 287 பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரபாகரன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் கற்பகம் வழங்கினார். அப்போது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன், ஊரக வாழ்வாதார இயக்க திட்ட அலுவலர் அருணாச்சலம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • தந்தை ரோவர் கல்வி குழுமத்தில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது
    • பாராட்டி சான்றிதழ்களும் வழங்கினார்.

    பெரம்பலூர்:

    தந்தை ரோவர் கல்வி குழுமத்தில் சார்பாக ஆசிரி யர் தின விழா மற்றும் சிறந்த ஆசிரியர்கள், பேராசி ரியர்களுக்கு விருது வழ ங்கும் விழா நடைபெ ற்றது.

    விழாவிற்கு தந்தை ரோவர் கல்வி குழும மேலா ண் தலைவர் வரதரா ஜன், தலைமை வகித்தார். துணை மேலான் தலைவர் ஜான் அசோக் குமார் அறங்கா வலர் மகாலட்சுமி வரதரா ஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் சிறப்பு விருந்தி னராக பட்டிமன்ற பேச்சா ளர் மோகனசுந்தரம் கலந்து கொண்டு சிறந்த 17 ஆசிரி யர்கள் மற்றும் பேராசிரி யர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கியும்,

    100 சதவீத தேர்ச்சி வழங்கிய 130 ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கு சான்றி தழ்களும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற வைத்த ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு பாராட்டி சான்றிதழ்களும் வழங்கினார்.

    விழாவில் ரோவர் கல்வி குழுமத்தின் கீழ் செயல்படும் அனைத்து கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் துணை முதல்வர்கள் பேரா சிரியர்கள் மற்றும் ஆசிரிய ர்கள் கலந்து கொண்டனர்.

    • போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • ெபாதுமக்கள் கலந்து கொண்டனர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்துள்ள எம்.ஜி.ஆர். நகர் மற்றும் எளம்பலூர் கிராமத்தில் போக்சோ சட்டம், பள்ளிகளில் மாணவர் இடைநிற்றல் மற்றும் தற்கொலைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் பெரம்பலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிச்சாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது, தற்கொலை முற்றிலும் தடுக்கப்பட வேண்டிய ஒரு செயல். மேலும் எந்தவொரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது என்றும், போக்சோ சட்டம் குறித்தும், போதைப்பொருட்களால் ஏற்படும் விளைவுகள் பற்றியும், குழந்தை திருமணங்கள் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் எடுத்துக்கூறினார். மேலும் கல்வியின் முக்கியத்துவம் பற்றியும், பெண்கள் கல்வி கற்பதன் அவசியம் குறித்தும் எடுத்துக்கூறி, அதை ஊக்கப்படுத்த வேண்டும் என்றும், பள்ளிகளில் இடையில் நின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். தங்களது குழந்தைகளுக்கு நல்ல அறிவுரைகளை வழங்கி பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும், என்றார். இதில் ெபாதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
    • நெஞ்சு வலி இருந்ததாக கூறப்படுகிறது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள சிறுகன்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன்(வயது 43). விவசாயி. இவருக்கு நெஞ்சுவலி காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை செய்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அவருக்கு நெஞ்சு வலி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கோவிந்தன் விஷம் குடித்தார். இதையடுத்து கோவிந்தனை உறவினர்கள் மீட்டு உடனடியாக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கோவிந்தன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசாருடன் கலந்துரையாடல் நடந்தது.
    • போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி நடத்தினார்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட போலீசாரின் நலன் மற்றும் போலீசாரை மேம்படுத்தும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி 'காபி வித் கான்ஸ்டபிள்' என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியை போலீஸ் அலுவலகத்தில் நடத்தினார்.

    இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆயுதப்படை மற்றும் சட்டம்- ஒழுங்கு, சிறப்பு பிரிவு ஆகியவற்றில் பணிபுரியும் போலீஸ்காரர் முதல் ஏட்டு வரை உள்ளவர்களில் எஸ் என்ற ஆங்கில எழுத்தில் பெயர் தொடங்கும் போலீசார்களில் தோராயமாக 15 போலீசாரை தேர்ந்தெடுத்து மாவட்ட போலீசாரை மேம்படுத்தும் வகையில் அவர்களுடன் போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி கலந்துரையாடல் நடத்தினார்.

    மேலும் அவர் இந்த நிகழ்ச்சியானது ஒவ்வொரு வாரமும் நடைபெறும் என்றும் தெரிவித்தார். இந்த கலந்துரையாடல் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் போலீசாரின் குறை, நிறைகள் மற்றும் மாவட்ட போலீசாரை மேம்படுத்தும் ஆலோசனைகள் பெறப்பட்டு, அவை நடைமுறைபடுத்தப்பட உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் போலீசாரின் மனநிலையை அறிந்து, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆ.ராசா எம்.பி. உருவப்படங்கள் எரிக்கப்பட்டன.
    • சனாதனம் குறித்து பேசிய சம்பவத்தில்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் செல்வராஜ் தலைமையில், அக்கட்சியை சேர்ந்த சிலர் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் முன்பு உள்ள சாலைக்கு வந்தனர். பின்னர் அவர்கள், சனாதனம் குறித்து தவறாக பேசியதாக தி.மு.க. இளைஞரணி செயலாளரும், விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் உருவபொம்மையையும், உருவப்படத்தையும் மற்றும் தி.மு.க. துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி.யின் உருவப்படத்தையும் கொண்டு வந்து, தீ வைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    • 2-ம் நிலை காவலர்-தீயணைப்பாளர் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி நடைபெறுகிறது
    • பெரம்பலூரில் 11-ந்தேதி தொடங்குகிறது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வேலை நாடும் இளைஞர்கள் படித்து பயன் பெறும் வகையில் தன்னார்வ பயிலும் வட்டம் இயங்கி வருகிறது. இவ்வட்டத்தின் சார்பாக பல்வேறு வகையான போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் இரண்டாம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை) இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான 3,359 காலிப்பணியிடம் அறிவிப்பு வெளியாகியுள்ளது. வருகிற 17-ந்தேதி இத்தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாளாகும். இத்தேர்விற்கான கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், வயது வரம்பு 18 வயது முதல் 26 வயது வரை ஆகும். வயது வரம்பு சலுகை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 28 வயது, பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் 31 வயது, ஆதரவற்ற விதவை 37 வயது, முன்னாள் ராணுவத்தினர் 47 வயது ஆகும். இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 11-ந்தேதி காலை 10 மணியளவில் நேரடியாக தொடங்கப்படவுள்ளது. எனவே இத்தேர்விற்கு, தயாராகி கொண்டிருக்கும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த தேர்வர்கள் தங்களின் பெயர் மற்றும் செல்போன் எண்ணை பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 9499055913 என்ற செல்போன் எண் மூலமாகவோ அணுகி பதிவு செய்து பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடையுமாறு, மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது
    • கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தமிழ்நாடு மாநில ஊரக/ நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் பெரம்பலூர் ரோவர் கல்விக்குழுமம் ஆகியவை இணைந்து சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமினை நாளை (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை பெரம்பலூர் ரோவர் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது. முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தனியார் டயர் தொழிற்சாலை, விரைவில் தொடங்கப்படவுள்ள கோத்தாரி பீனிக்ஸ் நிறுவனம் உள்ளிட்டவைகளும் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் அமைந்துள்ள 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கான பணி வாய்ப்புகள் வழங்க உள்ளார்கள். டிரைவர், தையல், 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐ.டி.ஐ., டிப்ளமோ, அக்ரி, நர்சிங், பார்மஸி, பி.இ., பி.டெக், ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் ஆசிரியர் கல்வி தகுதியுடையவர்களை தேர்வு செய்யவுள்ளனர். இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலை நாடுனர்கள் தங்களது ஆதார் எண், சுயவிவரம் மற்றும் கல்வி சான்றுகளுடன் கலந்து கொள்ளலாம்.

    • பா.ஜ.க. போராட்டம் நடைபெற்றது
    • தி.மு.க. அரசை கண்டித்து நடைபெற்றது

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட பட்டியல் அணி சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டமும், பிச்சை எடுத்து தி.மு.க. அரசுக்கு நிதி அனுப்பும் போரா ட்டமும் புது பஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் நடைபெற்றது.

    போராட்டத்திற்கு பட்டியல் அணி மாவட்ட தலைவர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் செல்வ ராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பார்வையாளர் சுரேஷ் பரமசிவம் கலந்து கொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்து பேசி னார்.

    தொடர்ந்து தமிழக அரசை கண்டித்து கோஷமி ட்டனர். பின்னர் பட்டியல் அணி பாஜக நிர்வாகிகள் கையில் ஏந்தி பிச்சை எடு த்து திமுக அரசுக்கு நிதி அனுப்பி வைப்பதற்காக நிதியை திரட்டினர்.

    இதில் பட்டியல் அணி மாநில செயலாளர் பிச்சை முத்து, மாநில பொதுகுழு உறுப்பினர் அசோகன், பொது செயலாளர் முத்த மிழ் செல்வன், நகர தலைவர் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக மாவட்ட பொதுசெயலாளர் ஜெயபால் வரவேற்றார். முடிவில் ஓபிசி மாவட்ட பொதுசெயலாளர் உதயகுமார் நன்றி கூறினார்.

    • வக்கீல்கள் கோர்ட்டு பணிகளை புறக்கணித்தனர்.
    • கோரிக்கை நிறைவேறும் வரை நடைபெறும்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் கோர்ட்டில் தாக்கல் செய்யும் அனைத்து மனுக்களும், வழக்கு ஆவணங்களும் ஆன்லைனில் இ-பைலிங் தாக்கல் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இது உடனடியாக செயல்பாட்டுக்கு வருவது மிக கடினமாக இருப்பதால் வக்கீல்களின் நலன் கருதியும், நீதிமன்ற பணிகள் பாதிக்காமல் இருப்பதற்காகவும் இ-பைலிங் உடனடியாக கட்டாயப்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்திட வேண்டும் என்றும், இ-பைலிங் தாக்கல் முறையை தற்காலிகமாக நிறுத்தும் வரை பெரம்பலூர் பார் அசோசியேஷன் (குற்றவியல்) தலைவர் வள்ளுவன் நம்பி தலைமையிலும் வக்கீல்களும், பெரம்பலூர் அட்வகேட் அசோசியேஷன் தலைவர் மணிவண்ணன் தலைமையிலும் வக்கீல்களும் நேற்று முதல் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் பணிகளை புறக்கணிக்க தொடங்கினர். இதனால் கோர்ட்டு பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. கோரிக்கை நிறைவேறும் வரை 2 அசோசியேஷனை சேர்ந்த வக்கீல்கள் தொடர்ந்து கோர்ட்டு பணிகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

    ×