என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
பெரம்பலூர்
பெரம்பலூர்,
பெரம்பலூர் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு சுமை பணி தொழிலாளர்கள் சங்கத்தினர் சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். இதில் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் , இறக்கு கூலியை உயர்த்தி வழங்க வேண்டும். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் தலையிட்டு இறக்கு கூலி உயர்வு வழங்க அறிவுறுத்த வேண்டும் என வலியுறுத்தியும், டாஸ்மாக் நிர்வாக இயக்குனரும், மதுபான உற்பத்தி நிறுவனங்களும் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்தும் கோஷமிட்டனர்.
கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில்வரும் 29-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.
பெரம்பலூர்,
பெரம்பலூரில் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கல்குவாரி டெண்டரில் அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரை தாக்கிய தி.மு.க.வினரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்பாட்டத்திற்கு முன்னாள் எம்எல்ஏவும், மாவட்ட செயலாளருமான இளம்பை இரா. தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார்.
முன்னாள் எம்பிக்கள் மருதராஜா, சந்திரகாசி, முன்னாள் எம்எல்ஏ பூவைசெழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக கட்சியின் அமைப்பு செயலாளாரும், முன்னாள் அமைச்சருமான மோகன் கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
தி.மு.க. அமைச்சரின் உதவியாளர் அத்துமீறி கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைந்து அரசு அதிகாரிகளையும், காவல் துறையினரையும், உள்ளாட்சி பிரதிநிதிகளையும் அடித்து தாக்கியதோடு, அரசு அலுவலக பொருட்களை அடித்து சேதமாக்கியுள்ள சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது.
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் ஒரு மாவட்ட செயலாளர் போலீஸ் ஸ்டேசனுக்கு சென்று விசாரணை கைதியை தன் பொறுப்பில் அழைத்து வந்தார். அதை கேள்விப்பட்ட முதல்வர் ஜெயலலிதா உடனடியாக அவரது மாவட்ட செயலாளர் பதவியை பறித்து விட்டார்.
ஆனால் தி.மு.க .ஆட்சியில் அரசு அதிகாரிகளையும், காவல்துறையினரையும் ஒரு அமைச்சரின் உதவியாளர் தலைமையில் தாக்கிய தி.மு.க. வினர் மீது முதல்வர் ஸ்டாலின் எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை. கருணாநிதி ஆட்சியில் மணல் கொள்ளை அடித்த வர்களை தடுக்க போன தாசில்தாரை லாரியை விட்டு ஏத்தி கொலை செய்து விட்டனர்.
இது போல் பல சம்பவங்கள் நடந்தேறியுள்ளது. இதை பின்பற்றியே தி.மு.க .ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தொடர்ந்து நடக்கிறது. தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து அமைப்பு செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான வரகூர் அருணாசலம் பேசியபோது:-
பெரம்பலூர் மாவட்டத்திற்குள் நடக்கும் கல்குவாரி டெண்டர்களில் அரியலூர் மாவட்டத்திலிருந்து அடி ஆட்களை அழைத்து வந்து அரசு அதிகாரிகளையும், காவல் துறையினரையும் அலுவலகத்தையும் தி.மு.க.வினர் அடித்து நொறுக்கினார்கள். கவர்னர் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகளை வீசியபோதே சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. அரசியலமைப்பு சட்டம் 356 சரத்தை பயன்படுத்தி இந்த தி.மு.க. ஆட்சியை கலைக்கவேண்டும் என தெரிவித்தார். பின்னர் தி.மு.க. அரசை கண்டித்து கோஷமிட்டனர்.
இதில் மாவட்ட நிர்வாகிகள் குன்னம் குணசீலன், ராஜாராம், ராணி, வீரபாண்டியன், எ.கே.ராஜேந்திரன், நகர செயலாளர் ராஜபூபதி, ஒன்றிய செயலாளர்கள் செல்வக்குமார், கர்ணன், சிவப்பிரகாசம், வக்கீல் கே.என். ராமசாமி, துறைமங்கலம் சந்திரமோகன், ஏகேஎன் அசோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- பெரம்பலூர் கல்குவாரி சம்பவத்தில்கைதானவர்களுக்கு நிபந்தனை ஜாமீன்
- மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவு
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கல் குவாரிகளுக்கான ஏலத்துக்கு விண்ணப்பிக்க வந்த பா.ஜ.க. தொழில் துறை பிரிவு மாவட்டத் துணைத் தலைவரும், கவுள்பா ளையம் ஊராட்சித் தலைவருமான செ.கலைச் செல்வன், அவரது சகோ தரர் முருகே சன், பா.ஜ.க. தொழில் துறை பிரிவு மாவட்டத்தலைவர் பி.முரு கேசன் ஆகியோரை தி.மு.க. வினர் தாக்கினர்.
மேலும், டி.எஸ்.பி. பழனி சாமி உள்ளிட்ட போலீஸார், உதவி புவியியலாளர் இளங்கோவன், வருவாய் அலுவலர் குமரிஅனந்தன் உள்ளிட்டோரையும் தாக்கியதுடன், அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தி னர்.
இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட புவியியல் - சுரங் கத் துறை துணை இயக்குநர் ஜெயபால் பெரம்பலூர் போலீசில் புகார் கொடுத் தார்.
புகாரின் பேரில், போலீ சார் 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, பெரம்பலூர் மாவட்டம், ஒகளூர் ஊராட்சி மன்ற தலைவரான கே.அன்பழகன், வேப்பூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி அமைப்பா ளரான ஆர்.அன்புச்செல் வன் உள்பட தி.மு.க. நிர்வா கிகள் 13 பேரை கடந்த 1-ந் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கைதான 13 பேர் மற்றும் இதே வழக்கில் கைதாகாமல் தலைமறைவாக இருந்த மகேந்திரன், தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு, மாவட்ட செயலாளர் ரமேஷ், தி.மு.க. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிவசங்கர் உள்பட 6 பேர் இவர்கள் அனைவரும் பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.
ஜாமீன் மனுக்களை விசாரணை செய்த மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.பல்கீஸ் இவர்கள் அனைவரும் பெரம்பலூர் குற்றவியல் நடுவர் எண்-1 நீதிமன்றத்தில் தினமும் காலை 10 மணிக்கு நேரில் ஆஜராகி கையெ ழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தர விட்டார்.
இதே சம்பவம் தொடர் பாக மேலப்புலியூர் கிரா மத்தை சேர்ந்த தி.மு.க. தொழிலாளர் அணி மாவட்ட துணை அமைப்பா ளர் ஆர்.ரமேஷ் என்பவர் தான் டெண்டர் போட வரும் போது தகாத வார்த் தையால் திட்டி, கைகளால் தாக்கி, கொலை செய்வோம் என மிரட்டியதாக அளித்த புகாரின் பேரில் பா.ஜ.க. தொழில் பிரிவு மாவட்ட துணைத்தலைவர் செ.கலை செல்வன், பா.ஜ.க. தொழில் பிரிவு மாவட்டத்தலைவர் பி.முருகேசன், செ.முருகே சன் ஆகியோர் மீது பெரம்ப லூர் போலீஸார் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவு களில் வழக்கு பதிவு செய் துள்ளனர்.
அகரம்சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் வட்டாரம், அகரம்சீகூர் அடுத்துள்ள லப்பைக்குடிகாடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், ஹான்ஸ் மற்றும் குட்கா போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது.
அதன் பேரில் லெப்பைக்குடிக்காடு அரசு ஆரம்ப சுகாதார வட்டார மருத்துவ அலுவலர் சேசு தலைமையில் வட்டார சுதாதார மேற்பார்வை யா ளர்கள் லெப்பைக்குடிக்காடு கடைவீதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போ து 2 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் புகையி லைப் பொருட்கள் மறைமு கமாக விற்பனை செய்வது கண்டு பிடிக்கப்பட்டது.
அதையடுத்து விற்ப னைக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.5000 ரூபாய் மதிப்புள்ள புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அப்பொ ருட்கள் சுகாதார முறையில் குழி அமைத்து புதைக்கப்பட் டது. மேலும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் உரிய ஆதாரங்களுடன் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
அகரம்சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்து மங்களமேடு அருகே ரஞ்சன்குடி கிராம பகுதியில் கள்ளத்தனமாக மதுவிற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சிறப்பு உதவி ஆய்வாளர் ராமசந்திரன் மற்றும் அவரது குழுவினர் சிறப்பு ரோந்து மேற்கொண்டு வந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் காவல்துறையினரை கண்டதும் தப்பி செல்ல முயன்றனர்.அவர்களை துரத்தி பிடித்து விசாரணை செய்ததில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் ரஞ்சன்குடி பூக்காரத் தெருவைச் சக்திவேல்( வயது 45),
மற்றும் அதே ஊரைச் சேர்ந்த அங்காளம்மன் கோவில் தெருவில் வசிக்கும் லெட்சுமி என்பது தெரியவந்தது. மேலும் அவர்களது இருசக்கர வாகனத்தை சோதனை செய்ததில் அதில் சட்டத்திற்கு புறம்பாக மதுபாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் இருவரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களிடமிருந்து 180 மி.லி அளவுள்ள 25 -மது பாட்டில்கள் மற்றும் ரூ.8710 பணத்தையும் மது கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- பல்வேறு பகுதிகளில் பணியாற்றுபவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக வரும் 9-ந்தேதி முதல் இயக்கப்பட உள்ளது.
- பொதுமக்கள் அனைவரும் அரசு பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பெரம்பலூர்:
தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பெரம்பலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்புவதற்கும் மற்றும் ஏனைய பகுதிகளுக்கு சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்கும் கூடுதல் சிறப்பு பேருந்து இயக்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து 16 ஆயிரம் அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கும்பகோணம் மற்றும் இதர கோட்ட அரசு போக்குவரத்து கழகம் மூலம் பல்வேறு பகுதிகளில் பணியாற்றுபவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக வரும் 9-ந்தேதி முதல் இயக்கப்பட உள்ளது.
பொதுமக்கள் அனைவரும் அரசு பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆம்னி பேருந்து உரிமையாளர்களை அழைத்து கட்டணம் நிர்ணயம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன் பேரில் தீபாவளியை முன்னிட்டு ஆம்னி பேருந்து நிர்ணயித்த கட்டணங்களில் இருந்து 30 சதவீதம் குறைப்பு செய்து இயக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதனை மீறி கூடுதலாக கட்டணம் வசூலித்தால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
பேட்டியின் போது பிரபாகரன் எம்.எல்.ஏ. உடன் இருந்தார்.
- பெரம்பலூரில் உயர்கல்வி வழிகாட்டல் பயிலரங்கம் நடைபெற்றது
- பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 12-ம் வகுப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் பள்ளி கல்விதுறை சார்பில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் உயர்கல்வி வழிகாட்டல் குறித்து ஒருநாள் பயிலரங்கம் ரோவர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
பயிலரங்கிற்கு ரோவர் கல்வி நிறுவனங்களின் மேலாண் தலைவர் வரதராஜன் தலைமை வகித்தார். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலர் ஜெய்சங்கர் ( இடைநிலை), உதவித் திட்ட அலுவலர் ரமேஷ் (தொடக்கநிலை) ஆகியோர் முன்னிலை வகித்து தொடங்கி வைத்தனர். மாதிரிப் பள்ளிகள் மண்டல ஒருங்கிணைப்பாளர் ராசபாண்டியன் சிறப்புரையாற்றினார். கனகராஜ், கார்த்திக், அனன்சியா ஆகியோர் கருத்தாளராக கலந்துகொண்டு ஜே.இ.இ, நீட், கிளாட் போன்ற நுழைவுத்தேர்வுகளுக்கு விண்ணப்பித்தல், பங்கேற்றல் மற்றும் உயர் கல்வி குறித்த பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
இதில் ரோவர் பள்ளி தலைமையாசிரியர் செல்வராஜ், வட்டார வள மைய மேற்பார்வையாளர் தேவகி, உயர்கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மகாதேவன், உள்ளடங்கிய கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாரதிதாசன், ஆசிரியர் பயிற்றுநர் கீர்த்தனா மற்றும் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 12-ம் வகுப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
- கல்குவாரி ஏலத்தில் தாக்குதல் நடத்திய விவகாரம் தொடர்பாக போலீசாரை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
- கருப்பு முருகானந்தம் உள்பட 16 பேர் மீது வழக்கு
பெரம்பலூர்,
பெரம்பலூரில் கடந்த அக்டோபர் 30-ந் தேதி கல் குவாரி ஏலம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இந்த ஏலத்தில் பங்கேற்க வந்த பா.ஜ.க.வினரை தி.மு.க. வினர் அடித்து தாக்கினர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பா.ஜ.க. மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கூறி பா.ஜ.க. மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் உள்பட 16 பேர் மீது பெரம்பலூர் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
- மாவட்ட செயலாளரும் முன்னாள் அரசு கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைத்தல் மற்றும் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளரும் முன்னாள் அரசு கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் விக்ரம பாண்டியன் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆசைமணி கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைத்தல் பணிகளை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் அறிவு, மாவட்ட துணை செயலாளர் பிச்சமுத்து, ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் சங்கர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் நகர செயலாளர் செல்வராஜ், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் சாமிநாதன், விவசாய அணி மாவட்ட செயலாளர் குணசேகரன்,
ஒன்றிய பொருளாளர் நலமுத்து மற்றும் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஜெயராமன், பேரவை இணை செயலாளர் தேவா மற்றும் இந்த கூட்டத்திற்கு இரவாங்குடி பாப்பாக்குடி ஏ.என்.பேட்டை, பட நிலை, காடுவெட்டி உள்ளிட்ட கிராமத்தில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பூத் கமிட்டி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஊராட்சி செயலாளர் தண்டபாணி நன்றி கூறினார்.
- கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு குழு கூட்டம் நடைபெற்றது
- 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை கூட்–டு–றவு வார விழா கொண்டாடுவதை முன்னிட்டு நடைபெற்றது
பெரம்பலூர்,
பெரம்பலூர் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் 70-வது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு பெரம்பலூர் மண்டல இணைப்பதிவாளர் க.பாண்டியன் தலைமையில் குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் வருகிற 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை கூட்டுறவு வார விழா கொண்டாடுவதை முன்னிட்டு கூட்டுறவு சங்கங்களில் கொடியேற்றுதல், மரக்கன்று நடுதல், ரத்த தான முகாம், கால்நடை சிகிச்சை முகாம், பள்ளி மாணவ, மாணவி–களுக்கு கவிதைப்பேட்டி, கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, துறை பணியாளர்களுக்கு விளையாட்டுப்போட்டி நடத்துவது. மற்றும் இறுதிநாள் அன்று சிறந்த சங்கங்களுக்கு கேடயங்கள் வழங்கப்படும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
- தி.மு.க.வினரை கண்டித்து பெரம்பலூரில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- 8-ந்தேதி நடக்கிறது
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான அ.தி.மு.க.வினர், எஸ்.பி. ஷ்யாம்ளாதேவியை சந்தித்து, கடந்த 30-ந்தேதி நடந்த கல்குவான் ஏலத்திற்கான டெண்டரின் போது அரசு அதிகாரிகளை தாக்கிய தி.மு.க.வினரை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி கோரி மனு கொடுத்தனர்.
பின்னர் அ.தி.மு.க .மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் கூறும்போது:-
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 30-ந்தேதி கனிமம் மற்றும் சுரங்கம் புவியியல் துறை சார்பில், கல்குவாரி ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் ஜனநாயக முறைப்படி கலந்துகொள்ள வந்தவர்களை 300க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் தடுத்து நிறுத்தி போக்குவரத்து துறை அமைச்சர் நேர்முக உதவியாளர் மகேந்திரன் தலைமையில், கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து சண்டையிட்டு அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். மேலும் அரசு அதிகாரிகளும், போலீசாரும், நிருபர்களும் தாக்கப்பட்டுள்ளனர்.
கலெக்டரே நேரில் வந்து கலவரம் நடக்கும்போது கலைந்து செல்லுங்கள் என்று எச்சரித்த போதும் அவரையும் ஒருமையிலே மிரட்டியும், டெண்டர் போட வந்தவர்களை அரை நிர்வாணப்படுத்தி அடித்து விரட்டிய கோரக்காட்சி, பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் அரங்கேறியது. இந்த செயலை அ.தி.மு.க .சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
அராஜகத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினரின் செயலை கண்டித்து மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வரும் 8-ந்தேதி காலை 10 மணியளவில் முன்னாள் அமைச்சர் மோகன் தலைமையில், முன்னாள் துணை சபாநாயகர் அருணாசலம் முன்னிலையில் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என தெரிவித்தார்.
மனு கொடுத்தபோது, மாவட்ட நிர்வாகிகள் குணசீலன் ராஜாராம், ராணி, வீரபாண்டியன், நகர செயலாளர் ராஜபூபதி, ஒன்றிய செயலாளர்கள் செல்வகுமார், கர்ணன், சிவப்பிரகாசம் உட்பட பலர் உடனிருந்தனர்.
- பெரம்பலூர் புது பஸ்ஸ்டாண்ட் அருகில் சாலையோர வியாபாரிகள் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உறுதி அளித்ததன் பேரில் தொடர் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
பெரம்பலூர்
பெரம்பலூர் புது பஸ்ஸ்டாண்ட் அருகில் சாலையோர வியாபாரிகள் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்க மாவட்ட தலைவர் வரதராஜ் தலைமை வகித் தார். சிஐடியு மாவட்ட தலைவர் ரங்கநாதன், மாவட்ட பொருளாளர் ரங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் அகஸ்டின் பேசுகையில், சாலையோர வியாபாரி களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும். சாலையோர வியாபாரி களின் வாழ்வாதார பாது காப்பு சட்டம் அமல்படுத்த வேண்டும், வெண்டர் கமிட்டி கூட்டத்தை கூட்ட வேண்டும்.
நகராட்சி ஆணையரின் தள்ளு வண்டிகளை அப்பு றப்படுத்தப்படும், பறிமுதல் செய்யப்படும் என்ற அறி விப்பை திரும்ப பெறவேண் டும், சாலையோர வியாபாரி களின் கோரிக்கைகள் மீது தொழிற்சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என வலி யுறுத்தினார்.
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் டிஎஸ்பி பழனிசாமி மற்றும் நகராட்சி அலுவலர்கள் நடத்திய சமரச பேச்சுவார்த் தையில், தீபாவளி பண்டிகை வரை தள்ளுவண்டி பறி முதல் செய்யப்படாது, தீபா வளி பண்டிகைக்கு பிறகு தொழிற்சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உறுதி அளித்ததன் பேரில் தொடர் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்