search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கல்லூரி பேராசிரியர் அதிரடி கைது
    X

    கல்லூரி பேராசிரியர் அதிரடி கைது

    கல்லூரி பேராசிரியர் அதிரடி கைது

    பெரம்பலூர்,

    விழுப்புரம் மாவட்டம் திருவண்ணை நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் திருவள்ளுவன். இவரது மகள் சுபா ஆடலரசி (வயது 26). இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியிள் அலுலலக உதவியாளராகவும், அதே பள்ளியின் மாணவிகள் விடுதியில் காப்பாளராகவும் பணி புரிந்தது வந்தார்.

    சம்பவத்தன்று தனது விடுதி அறைக்கு சென்ற அவர் அங்கு துப்பட்டாவில் துக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். மறுநாள் மதியம் பள்ளியில் பணிபுரியும் தூய்மை பணியாளர் விடுதி அறைகளை சுத்தம் செய்ய சென்ற போது சுபாஆடலரசி தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் அவர் பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார். இது குறித்து பள்ளி நிர்வாகம் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு பெரம்பலூர் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சுபாஆடலரசி இறப்பதற்கு முன்பாக கைப்பட உருக்கமான கடிதம் எழுதியுள்ள்ளார். அதன் அடிப்படையில் முதற்கட்டமாக பெரம்பலூர் போலீசார் தற்கொலை வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதனிடையே சுபா ஆடலரசி தற்கொலை செய்து கொள்ள கூடியவர் இல்லை என்றும், மகளின் சாவில் சந்தேகம் உள்ளதகாவும், உரிய விசாரணை நடத்த வேண்டும் அவரது பெற்றோர் பெரம்பலூர் போலீசாரிடம் தெரிவித்தனர். மேலும் பள்ளி மற்றும் விடுதி விடுமுறையில் உள்ள போது விழுப்புரத்திலிருந்து மகள் ஏன் வந்தார் என்றும் சந்தேகம் எழுப்பினர்.

    இதை தொடர்ந்து பெரம்பலூர் போலீசார் மேலும் விசாரணை நடத்தினர். அப்போது சுபா ஆடலரசி தற்கொலை வழக்கில் புதிய திருப்பமாக அதே நிறுவன கல்லூரியில் பணியாற்றிவரும் கும்பகோணத்தைச் சேர்ந்த சத்தியராஜ் என்பவரை பெரம்பலூர் போலீசார் கைது செய்தனர்.

    விசாரணையில் சுபா ஆடலரசியை சத்தியராஜ் காதலித்து வந்ததும், அவர் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்று தெரிந்தும், இருவரும் சேர்ந்து பல இடங்களுக்குச் சென்று ஒன்றாக சுற்றி வந்ததும் தெரியவந்தது. இந்த நிலையில் அவருக்கு சுபா ஆடலரசியுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டது.

    பின்னர் வேறு ஒரு பெண்ணை காதலித்துள்ளார். அவரை திருமணம் செய்துகொள்ள ஏற்பாடு செய்துவந்தார். இது சுபா ஆடலரசிக்கு தெரிந்து மன வேதனையில் இருந்தார். இதையடுத்து சுபா ஆடலரசி கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து சத்தியராஜ் மீதும், அவரது தற்போதைய காதலி மீதும் தற்கொலைக்கு தூண்டிதாக பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் சத்யராஜை பெரம்பலூர் நீநிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இந்த சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×