search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் மண்டியிட்டு மனு அளித்த பொதுமக்கள் மனு
    X

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் மண்டியிட்டு மனு அளித்த பொதுமக்கள் மனு

    • 5, 6-வது பிளாகில் உள்ள 110 வீடுகள் காலி செய்ய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
    • வீடுகளை காலி செய்வதற்கு 3 மாதங்கள் அவகாசம் அளிக்க வேண்டும்.

    கோவை,

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் இன்று நடந்தது. இதில், ஏராளமான பொதுமக்கள் பல்வேறு அமைப்பினர் மனு அளித்தனர்.

    இதில், கோவை எஸ்.ஐ.எச்.எஸ். காலனி பகுதியில் உள்ள அருள்முருகன் நகர், காந்தி நகர் பகுதியை சேர்ந்த மக்கள் மண்டியிட்டு வந்து கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கோவை விமான நிலைய விரிவாக்க பணிக்காக எஸ்.ஐ.எச்.எஸ் காலனி பகுதியில் உள்ள அருள்முருகன் நகர், காந்தி நகர் பகுதியில் உள்ள 5, 6-வது பிளாகில் உள்ள 110 வீடுகள் காலி செய்ய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    மேலும், இந்த வீடுகளில் வருகிற 22-ந் தேதி மின் இணைப்பு துண்டிக்க போவதாக அறிவித்துள்ளனர். இந்த பகுதியில் பள்ளி குழந்தைகள் பலர் உள்ளனர்.

    இவர்களுக்கு தேர்வுகள் நடக்க உள்ளது. இந்த நிலையில், வீடுகளை காலி செய்ய சொல்கிறார்கள். வீடுகளை காலி செய்வதற்கு 3 மாதங்கள் அவகாசம் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மக்கள் விடுதலை முன்னணியினர் அளித்துள்ள மனுவில், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். பள்ளி, கல்லூரி பகுதியில் போதை பொருள் விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும்.

    டாஸ்மாக் கடைகளில் இரவு 11 மணிக்கு மேல் அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    கிணத்துக்கடவு வடபுதூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், வடபுதூரில் புதிதாக தொடங்க உள்ள டாஸ்மாக் கடை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என தெரிவித்தனர். பெரியசாமி லேஅவுட் பகுதியை சேர்ந்தவர்கள் அப்பகுதியில் உள்ள கோவிலை மாநகராட்சி அதிகாரிகள் இடிக்க கூடாது என வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளித்தனர்.

    Next Story
    ×