search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.7 லட்சம் பணத்தை அபகரித்த பெண் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி  மனு
    X

    ரூ.7 லட்சம் பணத்தை அபகரித்த பெண் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு

    • பணத்தை திருப்பி கேட்டால் கொலை செய்து விடுவதாக அந்தப் பெண்ணும் அவரது மகன்களும் மிரட்டுகிறார்கள்.
    • திருமண ஆசை காட்டி பணம் மோசடி செய்து வந்தது தெரிய வந்தது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை கமலம் நகரைச் சேர்ந்தவர் மாதேஷ் (வயது 27) என்பவர் தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தியிடம் கொடுத்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது:-

    திப்பம்பட்டி அருகே உள்ள பன்னிகுளம் பகுதி யைச் சேர்ந்த ஒரு பெண் தருமபுரியில் டைலர் கடை வைத்திருந்தார். அந்தப் பெண்ணுக்கு 2 மகன்களும் உள்ளனர்.அவர் என்னிடம் அன்பாக பேசிய தை தொடர்ந்து நானும், அந்த பெண்ணும் மிகவும் நெருக்கமாக பழகினோம். தருமபுரி மற்றும் ஒட்டப்பட்டி பகுதியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து குடும்ப மும் நடத்தி வந்தோம். இந்த நிலையில் அந்தப் பெண்ணின் மகன்கள் என்னிடம் ரூ.7 லட்சம் பணம் வாங்கினார்கள்.

    பணத்தை திருப்பி தந்து விடுவதாகவும் கூறினார்கள். மேலும் என்னை திருமணம் செய்து கொள்வதாக அந்தப் பெண் ஆசையும் காட்டினாள். இந்த தகவல் எனது மனை விக்கு தெரிந்ததும், அவளும் எனது குழந்தைகளும் பிரிந்து விட்டனர். இந்த நிலையில் அந்தப் பெண் என்னை திருமணம் செய்து கொள்ளா மல் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார்.

    மேலும் நான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டால் கொலை செய்து விடுவதாக அந்தப் பெண்ணும் அவரது மகன்களும் மிரட்டுகிறார்கள். இதனிடையே அந்தப் பெண் பல பேரிடம் திருமண ஆசை காட்டி பணம் மோசடி செய்து வந்தது தெரிய வந்தது. எனவே மாவட்ட நிர்வாகம் அந்தப் பெண் மீது நடவடிக்கை மேற்கொண்டு நான் இழந்த பணத்தை விட்டு தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

    இதே போன்று கடந்த வாரம் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்திலும் மெக்கா னிக் ஒருவர் திருமண ஆசை காட்டி ரூ. 3.50 கோடி அபகரித்து விட்டதாக அந்தப் பெண் மீது புகார் தெரிவித்து கலெக்டரிடம் மனு கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×