search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சி கலெக்டரிடம்  கோரிக்கை மனு:வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தலைமையில் வழங்கினார்
    X

    கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு சார்பில் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தலைமையில் கலெக்டர் ஷ்ரவன்குமாரிடம் கோரிக்கை மனு. வழங்கிபோது எடுத்தபடம்.

    கள்ளக்குறிச்சி கலெக்டரிடம் கோரிக்கை மனு:வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தலைமையில் வழங்கினார்

    • கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன்குமாரை நேரில் சந்தித்து சால்வை அணிவித்தனர்,

    கள்ளக்குறிச்சி:

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சிக்காக செயல்படுத்தும் அனைத்து நலத்திட்டங்களையும் உடனுக்குடன் செயல்படுத்தும் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட திட்ட இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான வசந்தம் கார்த்திகேயன் தலைமையில் கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன்குமாரை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து மற்றும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    கோடை காலத்தில் குடிநீர் பிரச்சினையை சமாளிக்கும் வகையில் அனைத்து ஊராட்சிகளுக்கும் தேவையான குடிநீர் வசதியை செய்து தர வேண்டும், ஊராட்சிகளின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு தேவைக்கு அதிகமாக வங்கி இருப்பு உள்ள ஊராட்சிகளின் மின் கட்டணத்தை வங்கி கணக்கிலிருந்து ஊராட்சி பொது நிதிக்கு மாற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும், அனைத்து ஊராட்சிகளுக்கும் புதிய குப்பை சேகரிக்கும் வண்டி மற்றும் டிராக்டர்கள் வழங்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளுக்கான பொருள் கூறு தொகையினை உடனடியாக வழங்க வேண்டும் ஊராட்சிகளுக்கு புதியதாக வழங்கப்பட்ட டிராக்டர்களுக்கான டிரைவரை ஊராட்சி அளவில் நியமித்திட தலைவருக்கு அனுமதி வழங்க வேண்டும், அதிகரித்துள்ள மக்கள் தொகைக்கேட்ப தூய்மை காவலர்களின் எண்ணிக்கையை உயர்த்திட அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் இருந்தது. மனுவினைப் பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் கோரிக்கைகளை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதில் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் ஆர்.சிரஞ்சீவி, செயலாளர் ஏ.திருமலை, பொருளாளர் பி.கலியன் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×