என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மாணவிகளை பின்தொடர்ந்த இளைஞர்களுக்கு போலீசார் எச்சரிக்கை
- இளைஞர்கள் அதிக சத்தத்துடன் ஹாரன் அடிப்பதும், மோட்டார் சைக்கி ளை தாறுமாறுமாக ஓட்டுவதுமாக இருந்தனர்.
- இனி இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள அருள்புரம் உப்பிலிபாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பள்ளி முடிந்து மாணவிகள் செல்லும்போது, மோட்டார் சைக்கிளில் வரும் சில இளைஞர்கள் அதிக சத்தத்துடன் ஹாரன் அடிப்பதும், மோட்டார் சைக்கிளை தாறுமாறுமாக ஓட்டுவதுமாக இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று பள்ளி ஆசிரியர்கள் அந்த இளைஞர்களை தடுத்து நிறுத்தி எச்சரித்தனர். போதையில் இருந்த இளைஞர்கள் ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஆசிரியர்கள், மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் மோட்டார் சைக்கிள்களுடன் இளைஞர்களை சிறைபிடித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடம் வந்த போலீசார், அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று, இனி இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்.