search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளியில் பாலர்சபை கூட்டம்
    X

    அரசு பள்ளியில் பாலர்சபை கூட்டம்

    • மாணவ- மாணவிகளை கல்வி சுற்றுலா கட்டாயம் அழைத்து செல்ல வேண்டும்.
    • தாங்கள் வசிக்கும் பகுதிகளில் விளையாட்டு பூங்கா வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் பிரதாபராமபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 12 வயது முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளை உறுப்பினராக கொண்டு பாலர்சபை கூட்டம் நடத்தப்பட்டது.

    இந்த பாலர் சபையில் சிறப்பு பார்வையாளராக நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் கலந்து கொண்டு பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பள்ளி மேம்பாடு, பகுதி வாழ் மேம்பாடு மற்றும் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்து அதற்குண்டான தீர்வுகளை விரைந்து செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    பிரதாபராமபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி, செருதூர் அரசினர் உயர்நிலைப்பள்ளி, புனித மிக்கெல் அரசினர் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளிகளை சேர்ந்த குழந்தைகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். பள்ளி மேலாண்மை குழுவில் மாணவ பிரதிநிதிகளும் இடம் பெற வேண்டும், பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடங்கள், நூலகம் மற்றும் கழிப்பறைகள் வேண்டும் வேண்டும்,

    அரசு போட்டித் தேர்வுகளுக்கு பள்ளியில் பயிற்சி அளிக்க வேண்டும், மாணவ மாணவிகளை கல்வி சுற்றுலா கட்டாயம் அழைத்து செல்ல வேண்டும், தாங்கள் வசிக்கும் பகுதிகளில் விளையாட்டு பூங்கா வேண்டும் போன்ற பல கோரிக்கைகள் குழந்தைகளால் பாலர் சபை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    இதில் நாகப்பட்டினம் மாவட்ட கல்வி அலுவலர் செல்வராஜ், கிராம ஊராட்சி தலைவர் சிவராசு, துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×