search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலில் முத்துப்பல்லக்கு ஊர்வலம்
    X

    குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலில் முத்துப்பல்லக்கு ஊர்வலம்

    • 78-வது ஆண்டு சித்திரைத் திருவிழாவையொட்டி முத்துப்பல்லக்கு ஊா்வலம் நடைபெற்றது.
    • விழாவுக்கான ஏற்பாடுகளை கேரள சேவா சங்கத்தினா் சிறப்பாக செய்திருந்தனா்.

    குன்னூர்,

    குன்னூரில் தந்தி மாரியம்மன் கோயில் 78-வது ஆண்டு சித்திரைத் திருவிழாவையொட்டி முத்துப்பல்லக்கு ஊா்வலம் நடைபெற்றது.

    குன்னூா் தந்தி மாரியம்மன் கோயில் சித்திரை தோ்த்திருவிழாவை ஒட்டி முத்துப்பல்லக்கு ஊா்வலம் நடைபெற்றது. குன்னூா் வி.பி. தெரு சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் இருந்து பஞ்ச வாத்தியம், சிங்காரி மேளம் முழங்க, பூ காவடி, பால் காவடி, தேவி ரக்ஷா மற்றும் முத்துக் காளைகளுடன் அபிஷேக பொருள்கள் ஊா்வலமாக கோவிலுக்கு எடுத்து வரப்பட்டு மாரியம்மனுக்கு சிறப்புஅபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

    மாலையில் அம்மன் திருவீதி உலா நடந்தது. இதில் ஏராளமானோா் அம்மனை வழிபட்டனா். முத்துபல்லக்கு ஊர்வலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மிகவும் கவர்ந்தது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கேரள சேவா சங்கத்தினா் சிறப்பாக செய்திருந்தனா்.

    Next Story
    ×