search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கோத்தகிரியில் போதைபொருள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
    X

    கோத்தகிரியில் போதைபொருள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

    • கடும் நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்றது.

    கோத்தகிரி,

    கோத்தகிரி அருகே உள்ள கெரடா மற்றும் கோத்தகிரி பஸ் நிலையத்தில் கஞ்சா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இந்நிலையில் பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை முன்னெடுக்கும் வகையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள தமிழக காவல்துறைக்கு அனுமதி அளித்துள்ளார்.

    கஞ்சா போதை குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளார். இதன் அடிப்படையில் டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் குன்னூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி தலைமையில் கோத்தகிரி நகர் பகுதி மற்றும் கெரடா கிராமத்தில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு கஞ்சா போதை பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வை வழங்கினார்.

    இந்த நிகழ்வில் கோத்தகிரி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பதி, கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுமான் கான், யாதவ் கிருஷ்ணன் மற்றும் கோத்தகிரி போலீசார்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×