search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரவங்கலாறு மலைப்பகுதியில் முகாமிட்டுள்ள அரிசி கொம்பன் யானை - பொதுமக்கள் பீதி
    X

    கோப்பு படம்

    இரவங்கலாறு மலைப்பகுதியில் முகாமிட்டுள்ள அரிசி கொம்பன் யானை - பொதுமக்கள் பீதி

    • கேரள வனத்துறையால் மயக்கஊசி செலுத்தி அரிசி கொம்பன் பிடிக்கப்பட்டு காலர்ஐடி பொருத்தி பின்னர் தேக்கடி, பெரியாறு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் விடப்ப ட்டது.
    • தற்போது அந்த யானை மேகமலை, ஹைவேவிஸ், இரவங்கலாறு உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

    உத்தமபாளையம்:

    கேரளமாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்காணல், சாந்தம்பாறை மற்றும் அதனைசுற்றியுள்ள கிரா மங்களில் அரிசிகொம்பன் என்ற யானை கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்களை பீதியடைய வைத்துள்ளது. இதுவரை 10 பேரை அந்த யானை மிதித்து கொன்றுள்ளதுடன் விவசாய நிலங்களையும் சேதப்படுத்தி வருகிறது.

    இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள வனத்துறையால் மயக்கஊசி செலுத்தி அரிசி கொம்பன் பிடிக்கப்பட்டது. பின்னர் அந்த யானை தேக்கடி, பெரியாறு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் விடப்ப ட்டது.

    அதன் கழுத்தில் அலைவரிசை கொண்ட காலர்ஐடி பொருத்தப்பட்டு அதன்இருப்பிடத்தை அறிந்துகொள்ளும் வகையில் வனத்துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிலையில் தற்போது அந்த யானை மேகமலை, ஹைவேவிஸ், இரவங்கலாறு உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டுள்ளது. மற்ற காட்டு யானைகளுடன் சேராமல் தனியாக செல்லும் இந்த யானை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் சென்று வருகிறது.

    குடியிருப்பில் இருந்த நாய்கள் குரைத்துகொண்டே இருந்ததையடுத்து தொழிலாளர்கள் வெளியே வந்து பார்த்த போது ஆக்ரோசமாக சுற்றிய அரிசிகொம்பனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். கருப்பசாமி என்ற தொழிலாளியின் வீட்டை உடைத்து வீட்டில் இருந்த உணவு பொருள் மற்றும் அரிசியை சேதப்படுத்திவிட்டு பின்வாசல் வழியாக வெளியே சென்றது. அதிக சத்தத்துடன் ஆக்ரோசமாக சுற்றி வருவதால் அதன் அருகில் செல்லவும் தொழி லாளர்கள் அச்சமடை ந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து யானையின் நடமாட்டம் இருந்த பகுதியை ஆய்வு செய்தனர்.

    இரவு நேரங்களில் யாரும் வெளியே வரவேண்டாம் எனவும், யானையை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தனர். அடிக்கடி தனது இருப்பி டத்தை மாற்றிக்கொண்டே மாலை மற்றும் இரவு நேரங்களில் மட்டும் குடி யிருப்புகளில் அரிசி கொம்பன் நடமாடி வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×