search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கோட்டை நகரில் ரூ.9 கோடியில் கட்டப்படும் பூங்காவுக்குள் 10 அடி உயரத்தில் பேனா சிலை
    X

    புதுக்கோட்டை நகரில் ரூ.9 கோடியில் கட்டப்படும் பூங்காவுக்குள் 10 அடி உயரத்தில் பேனா சிலை

    • புதுக்கோட்டை நகரில் ரூ.9 கோடியில் நிறுவப்பட்டுள்ள பூங்காவுக்குள் 10 அடி உயரத்தில் பேனா சிலை கட்டபட்டுள்ளது
    • வருகின்ற மார்ச் மாதம் திறப்பு விழா

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகரில் கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கல்லூரிக்கு எதிா்புறத்தில் இருந்த 5 ஏக்கா் காலியிடத்தில், தற்காலிகப் பேருந்து நிலையம் அவ்வப்போது செயல்பட்டு வந்தது. சா்க்கஸ், பொருள்காட்சிகளும் நடத்தப்பட்டு வந்தன.இந்த இடத்தில் நகராட்சியின் சாா்பில் பிரம்மாண்டமான பூங்கா கட்டுவதற்கான பணிகள் ஒருங்கிணைந்த நகா்ப்புற வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ. 9 கோடி மதிப்பில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கின.நடைப்பயிற்சி, ஸ்கேட்டிங், சைக்கிளிங் பாதைகள், சிறுவா்களுக்கான அறிவியல், கணிதப் பூங்காக்கள், உள்வட்ட திறந்தவெளி பூங்கா உள்ளிட்டவை இங்கே அமைக்கப்படுகின்றன.இந்தப் பூங்காவை ஆய்வு செய்த கலெக்டர் கவிதா ராமு வரும் மாா்ச் மாதத்தில் திறக்கப்படும் என்றும் அறிவித்தாா்.இந்த நிலையில், பூங்காவின் நுழைவாயில் அருகே 10 அடி உயரத்தில் பேனா சிலை வைக்கப்பட்டிருக்கிறது. சுற்றிலும் நீரூற்று அமைக்கப்பட்டு வருகிறது.ஏற்கெனவே, முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பேனாவை, சென்னை கடற்பகுதியில் வைக்க தமிழக அரசு முயற்சித்து வருவதும் அதற்கு சூழலியலாளா்கள் எதிா்ப்பு தெரிவித்து பேசுபொருளாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.


    Next Story
    ×