என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ரம்ஜான் பண்டிகையையொட்டி புதுக்கோட்டையில் இன்று களைகட்டிய ஆட்டுசந்தை
- புதுக்கோட்டையில் நாளை ரம்ஜான் பண்டிகையையொட்டி இன்று ஆட்டுசந்தை களைகட்டியது
- ரூ.2 கோடி வரை ஆடுகள் விற்பனை
புதுக்கோட்டை:
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை சந்தைப்பேட்டையில் நடைபெற்று வரும் வெள்ளிக்கிழமை ஆட்டு சந்தை கலைக்கட்டி வருகிறது, 2000-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் ஒரு ஆட்டிற்கு வழக்கத்தை விட 500 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளது, விலை அதிகரித்த போதும் ஆடுகளை வியாபாரிகளும் பொதுமக்களும் போட்டி போட்டு வாங்கி வருவதால் விவசாயிகள் மற்றும் ஆடு வளர்ப்பவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
புதுக்கோட்டை சந்தை ப்பேட்டையில் வார ம்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுசந்தை நடைபெறு வது வழக்கம். இந்த ஆட்டுச் சந்தையில் புதுக்கோ ட்டை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்ட ங்களிலிருந்தும் ஆடுகளை விற்கவும் வாங்கவும் அதிக அளவு விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வருகின்றனர்.இந்நிலையில் நாளைய தினம் ரம்ஜான் பண்டிகை நாடு முழுவதும் கொண்டா டப்பட உள்ள நிலையில் இந்த ஆட்டு சந்தையில் விற்பனை களைகட்டி வருகிறது. வழக்கத்தை விட ஆடுகளின் வரத்து அதிகரித்துள்ளது.
செம்மறியாடு, வரையாடு, வெள்ளாடு என மூன்று வகையான சுமார் 2000-க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகளும் கால்நடை வளர்ப்பவர்களும் இந்த ஆட்டுச் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆடு ஒன்றுக்கு 3000 ரூபாய் முதல் 25000 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது. விலை அதிகரித்துள்ள போதும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆடுகளை போட்டி போட்டு வாங்கி வருவதால் விவசாயிகள் மற்றும் ஆடு வளர்ப்போர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இன்று நடைபெறும் ஆட்டு சந்தையில் ஒன்றரை கோடி முதல் 2 கோடி ரூபாய் வரை விற்பனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.