என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மக்காச்சோளம் பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண் இணை இயக்குனர் ஆலோசனை
- மக்காச்சோளம் பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண் இணை இயக்குனர் ஆலோசனை தெரிவித்துள்ளார்
- படைபுழுக்கள் இலையின் அடிப்பகுதியை சுரண்டித் தின்றுச் சேதத்தை விளைவிக்கும்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் மா. பெரியசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விவசாயிகள், மக்காச்சோளப் பயிரில் படைப்புழுத் தாக்குதலை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த வில்லையெனில் புழுவின் தாக்குதல் தீவிரமாகிப் பயிர்ச் சேதம் மற்றும் மகசூல் இழப்பு ஏற்பட்டு விவசாயிகளுக்குப் பொருளாதார இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, விவசாயிகள் ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்திட கேட்டுகொள்ளப்படுகிறது.
படைபுழுக்கள் இலையின் அடிப்பகுதியை சுரண்டித் தின்றுச் சேதத்தை விளைவிக்கும். வளர்ந்த புழுக்கள் இலையுறையினுள் சென்றும் தண்டுப் பகுதிகளையும், மக்காச்சோளப் பயிரின் அடிப்பகுதியையும், நுனிப்பகுதியையும் தின்று சேதம் விளைவிக்கும். ஒரே தொகுப்பாக ஒரே சமயத்தில் மக்காச்சோ ளத்தை விதைப்பதன் மூலம் படைப்புழு தாக்குதலை குறைக்கலாம். உளுந்து மற்றும் பாசிப்பயறு போன்ற பயறுவகைப் பயிர்களை ஊடுபயிர் சாகுபடி செய்ய வேண்டும்.ஒரு ஏக்கருக்கு 10 எண்கள் பறவை தாங்கிகள் வைப்பதன் மூலம் விதைத்தது முதல் 30 நாட்கள் வரை மக்காச்சோள படைப்புழுக்களை கட்டுப்படுத்தலாம்.
படைப்புழுவின் தாக்குதல் அதிகரிக்கும்பொழுது 15 முதல் 20 நாட்களில், அசாடிராக்டின் ஒரு சதவீத இ.சி. 400 மி.லி. அளவு அல்லது இமாமெக்டின் பென்சோயெட் 5 எஸ்.ஜி. 80 கிராம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம். மக்காச்சோளப் பயிரானது 40-45 நாட்கள் வளர்ந்த நிலையில், ஸ்பெனிடோரம் 12 எஸ்.சி 100 மி.லி அல்லது நவ்லுரான் 10 இ.சி என்ற மருந்து 300 மி.லி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம்.மேலும் இப்பூச்சியின் தாக்குதல் 60 முதல் 65 நாட்கள் வளர்ந்த பயிரில் தென்பட்டால் புளுபென்டையமைடு 480 எஸ்.சி. 80 மி.லி. அல்லது குளோரோன்டிரிபுரோல் 18.5 எஸ்.சி. 80 மி.லி. ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை 200 லிட்டர் நீரில் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்