search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சவரிமுத்து அருள்தாஸ் நினைவு அறக்கட்டளையின் மேலாண்மை இயக்குனர் ஏ.சி.ரவிச்சந்திரனின் வாழ்க்கை வரலாற்று புத்தக வெளியீடு
    X

    சவரிமுத்து அருள்தாஸ் நினைவு அறக்கட்டளையின் மேலாண்மை இயக்குனர் ஏ.சி.ரவிச்சந்திரனின் வாழ்க்கை வரலாற்று புத்தக வெளியீடு

    • குடுமியான்மலையை தலைமையிடமாக கொண்டு சவரிமுத்து அருள்தாஸ் நினைவு அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இதன் மேலாண்மை இயக்குனராகவும், முதன்மை செயலாக்க திட்ட இயக்குனராகவும் ஏ.சி.ரவிச்சந்திரன் உள்ளார்.
    • ஏ.சி.ரவிச்சந்திரனின் வாழ்க்கை வரலாற்றினை ‘வாழும் அன்னை தெரசா’ என்ற பெயரில் ஆசிரியர் கு.ஜான் பீட்டர் என்பவர் ஆங்கிலம் மற்றும் தமிழில் ஒரே நூலாக இயற்றியுள்ளார்.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகாவிற்குட்பட்ட குடுமியான்மலையை தலைமையிடமாக கொண்டு சவரிமுத்து அருள்தாஸ் நினைவு அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இதன் மேலாண்மை இயக்குனராகவும், முதன்மை செயலாக்க திட்ட இயக்குனராகவும் ஏ.சி.ரவிச்சந்திரன் உள்ளார். அவர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், கல்வி உதவித்தொகை போன்றவற்றினை வழங்கி வருகிறார்.

    இதற்கிடையே தமது அறக்கட்டளை உறுப்பினர்கள் 2,500 பேர் உள்பட பல்லாயிரக்கணக்கானோர் வாழ்வாதாரம் மேம்பட உழைத்து வரும் ஏ.சி.ரவிச்சந்திரனின் வாழ்க்கை வரலாற்றினை 'வாழும் அன்னை தெரசா' என்ற பெயரில் ஆசிரியர் கு.ஜான் பீட்டர் என்பவர் ஆங்கிலம் மற்றும் தமிழில் ஒரே நூலாக இயற்றியுள்ளார்.

    இந்த புத்தக வெளியீட்டு விழா மணப்பாறையை அடுத்த பொத்தமேட்டுப்பட்டியில் அறக்கட்டளை நிதி அறங்காவலர் ஏ.டேனியல் ஜான் கென்னடி தலைமையில் நடைபெற்றது. நிர்வாகிகள் எம்.சுப்பையா, எஸ்.நல்லகுமார், எஸ்.ஜெயசீலன், ஏ.என்.சின்னதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவிற்கு வந்திருந்தோரை வி.பழனிசாமி, எஸ்.ஆறுமுகம், ஆர்.சி.ரெங்கசாமி, கே.வி.கிருஷ்ணமூர்த்தி, கே.மோகன் ஆகியோர் வரவேற்று பேசினர். நிகழ்ச்சிகளை ஏ.தேவசகாய மரியானந்தம் தொகுத்து வழங்கினார்.

    திரைப்பட நடிகைகள் நமீதா, நீலிமாராணி, ஜனனி ஐயர் ஆகியோர் குத்து விளக்கேற்றி விழாவினை துவக்கி வைத்தனர். தொடர்ந்து ஏ.சி.ரவிச்சந்திரனின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தினை நடிகைகள் நமீதா, நீலிமா ராணி, ஜனனி ஐயர், ஈரோடு கருணா மூர்த்தி ஆகியோர் வெளியிட்டனர்.

    விழாவில் பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ், கரூர் பி.அன்புச்செழியன், பி.தமிழ்ச்செல்வன், எம்.சசிக்குமார், ஏ.வி.கோவிந்தராஜ், எஸ்.சவுந்தரராஜன், எம்.சி.மாரிமுத்து, எம்.ஹரிகிருஷ்ணன், ஆர்.மாரியப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    அதனைத்தொடர்ந்து ஏ.சி.ரவிச்சந்திரன் ஏற்புரையாற்றினார். விழாவில் ஜெ.இன்னாசிமுத்து, என்.சரவணக்குமார், எஸ்.ராமையா, ஜி.பர்க்குணம், கே.மகாலிங்கம், எஸ்.சிவஜோதி, என்.விஜயக்குமார், ஏ.ஜோசப்பீட்டர் தனராஜ், எஸ்.சுப்பையா, ஆர்.செந்தில்குமார், பி.அறிவு தமிழன், பி.சதீஷ்குமார், ஆர்.மகேந்திரபாபு, எம்.ஆரோக்கியம் உள்பட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    முன்னதாக மலைதாதம்பட்டியில் இருந்து ஏ.சி.ரவிச்சந்திரன் சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். முடிவில் புத்தக ஆசிரியர் கு.ஜான் பீட்டர் நன்றி கூறினார்.

    Next Story
    ×