search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கோட்டையில் இலவச பயிற்சி முடித்த சிலம்பம், குத்துசண்டை மாணவர்களுக்கு சான்றிதழ்
    X

    புதுக்கோட்டையில் இலவச பயிற்சி முடித்த சிலம்பம், குத்துசண்டை மாணவர்களுக்கு சான்றிதழ்

    • புதுக்கோட்டையில் இலவச பயிற்சி முடித்த சிலம்பம், குத்துசண்டை மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கபட்டது
    • அமைச்சர் ரகுபதி சான்றிதழ் வழங்கினார்

    புதுக்கோட்டை:

    நேரு யுவகேந்திரா, குழந்தைகள் நலக்குழுமம், அலுவலர் மன்றம் மற்றும் புத்தாஸ் வீர கலைகள் கழகம், ஆகியவை இணைந்து நடத்திய இலவச சிலம்பம் மற்றும் குத்துச்சண்டை பயிற்சி முகாம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 30ம் தேதி தொடங்கி மே 8ந்தேதி வரை நடைபெற்ற இந்த பயிச்சி முகாமில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த காவேரி நகர், திருக்கோகர்ணம், திலகர் திடல், பழைய பேருந்து நிலையம், பெருங்குடி, கடியாபட்டி, தாஞ்சூர் ஆகிய ஏழு இடங்களில் இருந்து வந்த 350க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

    பயிற்சி நிறைவு விழா மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நேரு யுவ கேந்திராவின் உதவி திட்ட அலுவலர் நமச்சிவாயம், தலைமையில் நடைபெற்றது. மாவட்ட குத்துச்சண்டை கழகத்தின் தலைவர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். விழாவில் சட்டம் துறை அமைச்சர் ரகுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், தமிழக அரசு விளையாட்டுக்காக பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. அதில் மிக முக்கியமாக சிலம்பத்திற்கு முதல்வர் முக்கியத்துவம் கொடுத்து மூன்று சதவீத இட ஒதுக்கீடு கொடுத்துள்ளார்.

    எனவே விளையாட்டு துறையில் மாணவ, மாணவிகள் அதிக கவனம் செலுத்தி மென்மேலும் வளர வேண்டும் என்று பேசினார். அதன் பின்னர் பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் புதுக்கோட்டை நகர் மன்ற தலைவர் திலகவதி செந்தில் , நகர்மன்ற துணைத் தலைவர் லியாகத் அலி , அலுவலர்கள் மன்ற செயல் தலைவர் மருத்துவர் ராமசாமி , திரைப்பட இயக்குனர் ஜெயகாந்தன், மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் சுவாமிநாதன், ராசாப்பட்டி சமூக ஆர்வலர் வீரையா கலந்து கொண்டனர்.

    அலுவலர்கள் மன்ற செயலாளர் முனைவர் ரமேஷ், அரிமளம் சமூக ஆர்வலர் ராமமூர்த்தி வாழ்த்துரை வழங்கினர்கள், விழாவின் முன்னதாக புத்தாஸ் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளையின் தலைவர் சேது. கார்த்திகேயன் அனைவரையும் வரவேற்றார். பொருளாளர் ஹரிகிருஷ்ணன் நன்றி கூறினார் . இந்த விழாவில் 350க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×