search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கறம்பக்குடி ஸ்ரீ முத்து கருப்பையா கோவிலில் சித்திரை திருவிழா
    X

    கறம்பக்குடி ஸ்ரீ முத்து கருப்பையா கோவிலில் சித்திரை திருவிழா

    • கறம்பக்குடி ஸ்ரீ முத்து கருப்பையா கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது
    • திருவிழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் பக்தகோடி பொதுமக்களுக்கு அன்னதான நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றன

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்து கருப்பையா திருக்கோவிலில் கடந்த எட்டு நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் சித்திரை திருவிழா தொடங்கியது. தொடர்ந்து பெண்கள் பாலி எடுப்பு நிகழ்வு நடைபெற்றது. பின்பு தினந்தோறும் மண்டக படிதார்களால் சிறப்பு கலை நிகழ்ச்சிகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தது. திருவிழாவின் கடைசி நாளில் பெண்கள் தென்னம்பாளையை குடத்தலிட்டு அதற்கு பூ மற்றும் வண்ண காகிதங்களால் அலங்கரிக்கப்பட்டு அதனை தலையில் சுமந்தபடி கோவிலுக்கு உட்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் மது எடுத்து வந்து சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    பக்த கோடிகள் அழகு குத்தி, பால் காவடி, செடல் காவடி, பெரிய காவடிகளை செண்டை மேள தாளங்களுடன் எடுத்து வந்தனர். மேலும் முக்கிய நிகழ்வான கிடா வெட்டும் நிகழ்ச்சி மாலை நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் பக்தகோடி பொதுமக்களுக்கு அன்னதான நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றன. திருவிழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கறம்பக்குடி இன்ஸ்பெக்டர் செந்தூர் பாண்டியன் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.

    Next Story
    ×