search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    இலங்கைக்கு கஞ்சா கடத்தல்
    X

    இலங்கைக்கு கஞ்சா கடத்தல்

    • இலங்கைக்கு கஞ்சா கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்
    • நடுக்கடலில் மீனவர்களே துரத்தி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் கடற்கரையிலிருந்து நாட்டுப்படகு மீனவர்கள் கடந்த வியாழன் இரவு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.சுமார் 5 மைல் நாட்டிக்கல் தொலைவில் மீனவர்கள் மீன் க்கொண்டிருக்கையில் அங்கே இலங்கையை சேர்ந்த படகும், தமிழகத்தை படகும் அருகருகே நின்று கொண்டிருப்பதை கண்டுள்ளனர்.உடனே சந்தேகமடைந்த மீனவர்கள் அருகே சென்று பார்க்க முயன்றுள்ளனர். அதற்குள் சுதாரித்த இலங்கை படகை ஓட்டி வந்தவர்கள் உடனடியாக அங்கிருந்து படகோடு தப்பித்து சென்றுள்ளனர். அதனை தொடர்ந்து தமிழக படகை மடக்கி பிடித்த மீனவர்கள் அதில் இருந்த 2 பேரை கடலோர பாதுகாப்பு குழுமத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

    கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் அவர்களை விசாரித்ததில் குமரப்பன்வயல் மற்றும் செய்யானம் பகுதியை சேர்ந்த சங்கர் (32), ராஜதுரை (26) என்பதும் இவர்கள் இலங்கைக்கு 120 கிலோ கஞ்சா கடத்தியதும் தெரியவந்துள்ளது.அதனை தொடர்ந்து இருவரையும் மணமேல்குடி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு,மது அமலாக்கத்துறையினர் மேலும் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் கரகத்திக்கோட்டையை சேர்ந்த செந்தில் (50) என்பவர் இவர்களுக்கு கஞ்சா விநியோகம் செய்தது தெரிய வந்துள்ளது.அதனை தொடர்ந்து சட்டத்திற்கு புறம்பாக படகு மூலம் இலங்கைக்கு கஞ்சா கடத்தும் செயலில் ஈடுபட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்பு அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.கஞ்சா கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் வேறு சிலர் இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கைது செய்யப்பட்ட சங்கர், ராஜதுரை.

    Next Story
    ×