என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கறம்பக்குடி, மழையூரில் ஜல்லிக்கட்டு போட்டி
- முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்றது
- அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கிவைத்தார்
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் மழையூரில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.அந்த வகையில் இந்த வருடமும் மழையூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.மேலும் நிகழ்ச்சியில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, கறம்பக்குடி ஒன்றிய பெருந்தலைவர் மாலா ராஜேந்திரதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவரும், கறம்பக்குடி தெற்கு ஒன்றிய செயலாளருமான தவ பாஞ்சாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஜல்லிக்கட்டில் பல்வேறு புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். காளையை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாமல் வெற்றி பெற்ற காளைகளுக்கும் தங்க நாணயம், கட்டில், பீரோ, சைக்கிள், மிக்சி, பேன் ஆகிய பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆலங்குடி டி.எஸ்.பி. தலைமையில் கறம்பக்குடி இன்ஸ்பெக்டர் முன்னிலையில் போலீசார் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.விழாவிற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்றம் மற்றும் ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் சிறப்பாக செய்திருந்தனர். இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை கறம்பக்குடி சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.