search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கும்பாபிஷேக விழா
    X

    கும்பாபிஷேக விழா

    • கருங்காடு புலிக்குட்டி அய்யனார் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது
    • திருவாடுதுறை ஆதீனம் பங்கேற்பு

    ஆவுடையார்கோவில்,

    கருங்காடு கிராமத்தில்உள்ள பூர்ணபுஷ்கலா அம்பிகை சமேத ஸ்ரீ புலிக்குட்டி அய்யனார், ஸ்ரீ கருங்காளியம்மன், ஸ்ரீ காத்தான் சாம்பான் ஆகிய சாமி ஆலயத்தில் திருப்பணிகள் முடிவுற்று கும்பாபிஷேகம் நடத்துவதென அப்பகுதி கிராமத்தார்களால் முடிவு செய்யப்பட்டது. இதற்காக சிறந்த யாகசாலை அமைத்து கடந்த 25ம் தேதி சனிக்கிழமை கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து 3நாட்களாக 4கால யாக பூஜை நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பெற்று பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணதேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தைக் காண திரண்டிருந்த அப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் புலிக்குட்டி அய்யனார் சாமி அருள் பெற்றுச் சென்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    Next Story
    ×