search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விராலிமலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தகால் நடும் விழா
    X

    விராலிமலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தகால் நடும் விழா

    • விராலிமலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தகால் நடும் விழா நடைபெற்றது
    • முன்னாள் அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் பங்கேற்பு

    விராலிமலை,

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வெளியம்பூர் குளம் திடலில் வரும் 25-ந் தேதி காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. அதனைமுன்னிட்டு விழாவிற்கான முகூர்த்தகால் நடப்பட்டு போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.விராலிமலை மெய்க்கண்ணுடையால் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி வருகிற 25-ந் தேதி நடத்துவதற்கு ஊர் முக்கியஸ்தர்கள், விழா கமிட்டியினர் சார்பில் முடிவு செய்யப்பட்டு போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் தொடங்குவதற்கு விழா குழு சார்பில் நேற்று முகூர்த்த கால் நடப்பட்டது.

    முகூர்த்த கால் நடும் விழாவில் விராலிமலை சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான டாக்டர் சி. விஜயபாஸ்கர், ஆவின் சேர்மன் பழனியாண்டி, விராலிமலை தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் விராலூர் அய்யப்பன், மேற்கு மாவட்ட கவுன்சிலர் சிவசாமி, ஊர் நாட்டாமை மணி, ஜல்லிக்கட்டு தலைவர் கார்த்திகேயன், கூட்டுறவு சங்கத்தலைவர் அய்யப்பன், ஊராட்சி மன்ற தலைவர் ரவி, துணை தலைவர் தீபன் சக்கரவர்த்தி, வெல்கம் மோகன், தி.மு.க. நகரச் செயலாளர் சண்முகசுந்தரம், அ.தி.மு.க. நகர செயலாளர் செந்தில், முரளிதரன், ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன், மாமுண்டி, கௌதமன், உள்ளிட்ட விழா கமிட்டியினர் பங்கேற்று விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    இதில் கலந்து கொள்ளும் காளைகள் மற்றும் வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது மேலும் சிறந்த காளைகள், மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

    Next Story
    ×