search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொன்னமராவதியில் புரவி எடுப்பு  திருவிழா
    X

    பொன்னமராவதியில் புரவி எடுப்பு திருவிழா

    • மழை வேண்டி, விவசாயம் செழிக்க வேந்தன்பட்டி நல்லாண்டி அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா நடைபெற்றது
    • ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்

    பொன்னமராவதி,

    வேந்தன்பட்டியில் மழை வேண்டியும் விவசாயம் செழிக்க வேண்டியும் நல்லாண்டி ஐயனார் பள்ளத்து அய்யனார் ஆகிய இரு வேறு திசைகளளில் உள்ள அய்யனார் கோயில்களில் ஓரே நாளில் நடைபெற்ற ஆடி புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு கடந்த ஆடி முதல் தேதியன்று குதிரைகள், காளைகள், நாய் உள்ளிட்ட புரவிகள் செய்ய பிடிமண் கொடுக்கப்பட்டு ஊரில் குதிரை பொட்டல் என்னும் இடத்தில் ண்ணை வைத்து புரவிகள் செய்யப்பட்டு அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழாவுக்கு தயார் செய்யப்பட்டு நிலையில் இரு திசைகளில் உள்ள அய்யனார் கோயியிலுக்கு எடுத்து செல்ல சிலைகள் அலங்கரிக்கப்பட்டு அங்கிருந்து கிழக்கு திசையில் 2கிலோமீட்டர் தொலைவில் ஊர் எல்லையில் உள்ள பள்ளத்து அய்யனார் கோயிலுக்கு புரவிகளை பக்தர்களும், பொதுமக்களும் தோலில் தூக்கிக்கொண்டு ஊரின் எல்லைக்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, அங்கு வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அங்கிருந்து வேந்தன்பட்டிக்கு வந்து மீண்டும் அதே போன்று குதிரை பொட்டலில் இருந்து வைக்கப்பட்டிருந்த வேறு புரவிகளை அங்கிருந்து மேற்கு திசையில் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் ஊர் எல்லையில் உள்ள நல்லாண்டி அய்யனார் கோயிலுக்கு எடுத்துச்சென்று வைத்து வழிபட்டனர் இதில் சுற்றுவட்டார கிராம மக்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர்.பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டன.ஆண்டுதோறும் இவ்வாறு வழிபடுவதன் மூலமாக பல்வேறு நன்மைகள் கிடைப்பதாக ஐதீகமாக கொண்டு பல தலைமுறைகளாக இவ்வாறான வழிமுறை இன்றும் நடைபெற்றுவருகிறது. பாதுகாப்பு பபணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

    Next Story
    ×